ரங்கசாமிக்கு தெரியும்.. மாரியாத்தாவுக்கு ஆகாது.. அலறிய பாட்டி.. பதறி ஓடிய நர்ஸ்கள்.. என்னாச்சு?
தடுப்பூசி செலுத்த வந்த நர்ஸ்களை விரட்டி அடித்துள்ளார் பாட்டி ஒருவர்
புதுச்சேரி: தடுப்பூசி போட்டால் மாரியாத்தாவுக்கு ஆகாது என்று சொல்லி, நர்ஸ்களை விரட்டி சாமியாடி அடித்துள்ளார் ஒரு பாட்டி.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Recommended Video
கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றே ஆறுதலாக இருந்து வருகிறது.. எனினும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள பலர் முன்வராத நிலைமையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தது.
இதற்காகவே அரசு பிரத்தியேகமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.. பல சலுகைகளை அறிவித்தது.. அப்போதும்கூட, தடுப்பூசி செலுத்தி கொண்டால் பக்கவிளைவு ஏற்படும் என்ற பயம் இன்னமும் மக்களுக்கு ஆங்காங்கே இருக்கவே செய்கிறது.

விழிப்புணர்வு
நம் தமிழகமும் இதற்கு விதிவிலக்கல.. பலர் ஆர்வம் காட்டுவதில்லை.. பல்வேறு கிராமங்களில், நர்ஸ்கள் தடுப்பூசிகளை செலுத்த வருவதை பார்த்ததுமே, எத்தனையோ பேர் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.. கோவை தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமத்திற்கு டாக்டர்களும், நர்ஸ்களும் சென்றபோது, இவர்களைக் கண்ட கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்... சிலர் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டனர்... மேலும் சில இளைஞர்கள் மரத்தில் ஏறி கொண்டனர்.

புதுச்சேரி
அதேபோல இன்னொரு கிராமத்தில், தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கே தப்பி ஓடிய நிகழ்வும் உண்டு.. இதனால் நிறைய கிராமங்களில், இவடர்கள் எல்லாம் திரும்பி வருவார்கள் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் காத்து கிடந்து தடுப்பூசிகளுடன் திரும்பி சென்றுள்ளனர்.. இப்போதும் ஒரு சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.. கொரோனா தடுப்பூசி 100 சதவீதத்தை எட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நர்ஸ்கள்
அந்தவகையில், நேற்று காலை புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வந்துள்ளனர்.. ஒரு முதியவர் குடும்பத்திற்கு சென்ற நர்ஸ்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து கேட்டுள்ளனர்.. அதற்கு அவர்கள் குடும்பத்தோடு கை எடுத்து குப்பிட்டு வேண்டாம் என்று சொன்னார்கள்..

பாட்டி
பிறகு அங்கிருந்த ஒரு நர்ஸ், இந்த தடுப்பூசி ஒன்றுமே ஆகாது என்று சொல்லி அந்த வீட்டில் இருந்த பாட்டியின் அருகில் சென்றுள்ளார்.. உடனே பாட்டிக்கு திடீரென சாமி வந்துவிட்டது.. மாரியம்மா... அங்காளம்மனுக்கு ஆகாது-ன்னு சொல்றேன்.. என்ன பண்ணிட்டு இருக்கே நீ? என்று கத்த தொடங்கினர்... இதனால் ஒன்றும் புரியாமல் நர்ஸ்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் விழித்தனர்.. அப்போதும் அந்த பாட்டி, "இது ரங்கசாமிக்கும் தெரியும், சொல்றது புரியுதா" என்று மறுபடியும் சத்தம் போட்டார்..

ஏமாற்றம்
உடனே அங்கிருந்த அவரது கணவர், "போங்கம்மான்னு சொல்றேன் இல்ல" என்று சொன்னவுடன் நர்ஸ்கள் அந்த வீட்டில் இருந்து பதறியடித்து கொண்டு திரும்பி வந்து வெளியே நின்றுவிட்டனர்.. நீண்ட நேரம் அங்கேயே காத்து கிடந்தவர்கள், பிறகு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர்.. கொரோனா தடுப்பூசி செலுத்த வந்தவர்களை, சாமியாடி துரத்திய பாட்டியின் அந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றது.












Click it and Unblock the Notifications