கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும்.. பாமக மா.செ குடும்பத்தை சந்தித்த பிறகு அன்புமணி ஆவேசம்..!
புதுச்சேரி: கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், நீதி கிடைக்கும் வரை பாமக ஒரு போதும் ஓயாது எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளித்தார். அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

108 மதுக்கடைகள் மூடல்
காரைக்கால் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தளபதியாக தேவமணி திகழ்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார். ''கல்வி, திருமணம் என எந்த வகையான உதவி கேட்டு, யார் வந்தாலும் உதவி செய்யக்கூடியவர் என்றும், மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி 108 மதுக்கடைகளை மூட வைத்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

பின்னணியில் சூழ்ச்சி
மாவட்டச் செயலாளர் தேவமணியின் படுகொலைக்கு நீதி பெற்றுத் தரும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என்ற உறுதியை அன்புமணி அளித்தார். மேலும், இந்தக் கொலைப் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாக தனக்கு செய்திகள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்தக் கொலையின் பின்னணியில் காவல்துறையை சேர்ந்த ஒரு சிலர் இருப்பதாக செய்திகள் வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

உண்மை குற்றவாளிகள்
பாமக மாவட்டச் செயலாளர் கொலை தொடர்பாக அண்மையில் 4 பேரை காவல்துறை கைது செய்திருந்தாலும் கூட, உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் தான் உள்ளதாக தெரிவித்தார். கூலிக்கு படுகொலை செய்யும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, இத்தகைய கூலிப்படையினர் மீது புதுவை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூலிப்படை
தேவமணி படுகொலை தொடர்பாக சரியான முறையில் காவல்துறை விசாரணை நடத்தாவிட்டால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும் என எச்சரிக்கை விடுத்தார். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கூலிப்படையினரை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் மற்றும் ஆளுநரை அன்புமணி ராமதாஸ் விரைவில் சந்திப்பார் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications