12 வயதில் உளியை பிடித்த சிறுமி.. குருவை விஞ்சிய சிஷ்யையான தருணம்.. புதுகை அஞ்சனாவின் அஞ்சாத சாதனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மரதச்சு வேலைகளில் சிறந்து விளங்கி வருகிறார். தனது குருவான தந்தையிடம் வித்தையை கற்று கொண்ட அவர் குருவை விஞ்சிய சிஷ்யை என்ற பெயரையும் எடுத்துள்ளார்.
Recommended Video
"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந் தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்றான் பாரதி...
தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம். இதற்கு ஆணெண்ண, பெண்ணெண்ண என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் புதுக்கோட்டை பள்ளி மாணவி...

மூத்த மகள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் - கவிதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி அஞ்சனா ஸ்ரீ. ஆம், பெயருக்கேற்றார் போல் எதற்கும் அஞ்சாதவள்தான் இந்த அஞ்சனா ஸ்ரீ... இவருக்கு தேஜா ஸ்ரீ, ஜெய் சாய் ஸ்ரீ ஆகிய இரண்டு சகோதரிகள்.

கொரோனா காலத்தில் திறமை
திருக்கோகர்ணம் அரசு பெண்கள் பள்ளியில் படித்து வரும் அஞ்சனா ஸ்ரீ படிப்பில் மட்டுமல்லாது, சிலம்பம் சுற்றுதல், பரத நாட்டியம், ஓவியம் அனைத்திலும் கெட்டிக்காரி... காலமும், சூழ்நிலையும் தான் ஒரு மனிதனின் திறமையை வெளிக்கொணரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை... ஆம், அஞ்சனா ஸ்ரீ-க்கு அப்படி ஒரு திறமையை வெளிக் காட்டியது கொரோனா காலம்...

மர வேலைப்பாடு
புதுக்கோட்டை நகர் பகுதியில் பூ மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நிலை கதவு, கட்டில் உள்ளிட்ட மர தச்சு வேலைகள் செய்து வருபவர் அஞ்சனா ஸ்ரீ அப்பா முத்துக்குமார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது தனது வீட்டில் வைத்து வேலைகள் செய்து வருகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா ஸ்ரீக்கு தானும் அந்த வேலையை செய்ய ஆசை வர, ஆசையை ஆர்வமாக்கி தனது அப்பா முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

அரை மனதுடன் ஒப்புதல்
ஒரு நேரத்தில் பயந்தாலும், அரை மனதுடன் சரி என்று தன்னுடைய தொழில் நுணுக்கங்களை மகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் நீண்ட நேரம் ஆனாலும் பரவாயில்லை, செய்யும் தொழிலில் கவனமும், தெளிவும் முக்கியம் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அறிவுரையை கச்சிதமாக பிடித்துக் கொண்ட இந்த திறமைசாலி அஞ்சனா ஸ்ரீ மிகக்குறுகிய காலத்திலேயே அப்பா ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய திறமையை மர சிற்ப வேலைகளில் காட்டியுள்ளார்.

கதவு டிசைன்
பூ போடுதல், மயில், சாமி சிற்பம், நிலை கதவு டிசைன், மர சிற்ப தேர் உள்ளிட்ட அனைத்து சிற்பங்களையும் செதுக்குதல், சீவுதல் என சிறப்பாக செய்து வருகிறார். உளி சுத்தியல் கொண்டு கைதேர்ந்த சிற்பிகளைப் போன்று திகழ்ந்து வருகிறார். மேலும் சிற்ப வேலைகளுக்கு முன்னர் செய்யக்கூடிய ஓவியம் தீட்டுதலிலும் வல்லவர்.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த சிறுமி
இச்செயல் நாளடைவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்சமயம் தனது குருவான அப்பாவிற்கு சரிசமமாக சிற்ப வேலை செய்து வருகிறார். மருத்துவம், பொறியியல் என்ற கனவுகளுடன் வாழும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மத்தியில் அஞ்சனா ஸ்ரீயின் லட்சியம் வித்தியாசமாக உள்ளது.

நவீனமயமாக்குதல்
ஆம், சிற்ப சாஸ்திர முறைகளை நன்கு அறிந்து, அதனை பயன்படுத்தி அப்பா செய்யும் மர சிற்ப வேலையை நவீனமயமாக்குதலே தனது எதிர்கால லட்சியம் என்று கூறுகிறார் அஞ்சனா ஸ்ரீ. அவருடைய லட்சிய பயணம், சிறப்படைய நாமும் வாழ்த்துவோம். தந்தை வழி தொழில் என்றால் அது டாக்டர், என்ஜினியர், ஆடிட்டர், மென்பொருள் என்ஜினியர் உள்ளிட்ட தொழில்களில் மட்டுமே பிள்ளைகள் விரும்பி ஏற்கிறார்கள். ஆனால் விவசாயம், தட்டச்சு, பிளம்பிக், வியாபாரம் உள்ளிட்டவற்றை யாரும் ஏற்பதில்லை. அந்த வகையில் இந்த சிறுமியின் ஆர்வத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள், ஊக்குவித்தும் வருகிறார்கள். கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது என்பதற்கு உதாரணமாக இந்த சிறுமியின் செயல் உள்ளது.

பள்ளிகள் திறக்காத நேரம்
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காத நேரத்தில் டிவியை பார்த்தோமா, செல்போனில் 4 கேம்களை விளையாடினாமோ என இல்லாமல் தந்தைக்கு உதவி செய்யும் எண்ணம் அனைத்து சிறுவர்களுக்கும் வர வேண்டும். அஞ்சனாவை போல் நிறைய சிறுவர்கள் தங்களது தந்தைக்கு உதவி வருகிறார்கள். அண்மையில் ஒரு சிறுவன் தனது தந்தைக்கு உதவியாக பழ வியாபாரம் செய்து வருவதையும் செய்திகளில் பார்த்தோம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications