இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகள்.. தனியார் பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
புதுச்சேரி: இயக்குனர் சேரன் விதிமுறையை மீறி அதிக சத்தத்துடன் ஹாரனை ஒலிக்கவிட்டுச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை ஏற்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகாரும் அளிக்கப்படவில்லை.
ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிசம், முரண், யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் இயக்குனர் சேரன். இவர் அண்மையில் கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் புதுச்சேரியில் இருந்து சேரன் கடலூர் நோக்கி தனியார் பேருந்து வேகமாக ஒன்று வந்தது. அந்த பேருந்தின் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் நடு சாலையில் நின்றது. அப்போது தனியார் பேருந்தை வழிமறித்து ஏன் இப்படி சத்தமாக ஹாரன் அடிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் ஓட்டுனரின் செயலை இயக்குனர் சேரன் கண்டித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக புகார் குறித்தோ வழக்கு பதிவு செய்தது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை..
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆலோசித்தனர்.
இதை தொடர்ந்து தற்போது தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ நாங்கள் இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொள்கிறோம். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை” இவ்வாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications