"எம்பிபிஎஸ் படித்துவிட்டு ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்.." 498 மார்க் எடுத்து சாதித்த புதுவை மாணவன்

Subscribe to Oneindia Tamil

புதுவை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மார்க் எடுத்துள்ள மாணவர் பரத்குமார், தான் இந்த சாதனையை எட்ட பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை என்றும், எம்பிபிஎஸ் படித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மார்க் எடுத்துள்ள மாணவர் பரத்குமார், தான் இந்த சாதனையை எட்ட பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு எம்பிபிஎஸ் படித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவர் பரத்குமார் கூறியதாவது:-

Aspiration is to become IAS after studying MBBS Puduvai student who scored 498 marks in SSLC Exam

என் பெயர் பரத்குமார். இப்போது முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 498 மார்க் எடுத்துருக்கிறேன். புதுச்சேரியில் ஸ்டேட் பர்ஸ்ட் மற்றும் தமிழகத்தில் ஸ்டேட் செகண்ட்ஸ் ஆக வந்திருக்கிறேன். இங்கே நான் மட்டும் இந்த டார்கெட்டை அஜ்ஜீவ் பண்ணிவிட்டேன் என்று சொல்ல முடியாது. எனது நன்றிக்கடனை எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் இந்த மார்க் எடுப்பதற்கு ரொம்ம ஸ்டிரஸ் எடுத்துக்கொள்ளவில்லை. தினமும் பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை இரவில் ஒரு முறை படிப்பேன். பின்னர் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருந்து மீண்டும் ஒருமுறை ரிவைஸ் செய்வேன். அவ்வளவு தான். எனது பள்ளி ஆசிரியர், பிரின்ஸ்பெல் என எல்லாருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

11ஆம் வகுப்பில் நான் பையாலஜி குரூப் எடுக்கிறேன். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு ஒரு டிகிரி முடிக்க இருக்கிறேன். அதாவது எம்பிபிஎஸ் படிக்க முடிவு எடுத்திருக்கிறேன். இதன்பிறகு யூபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை. நன்றி.. இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வினை தமிழ்நாடு முழுவதும், 8,94,264 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது இந்த ஆண்டு 91.55 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடவும் அதிகரித்து உள்ளது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வில் 3 மாணவிகள், 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

இதேபோல், தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் சிவகங்கை மாவட்டமும், மூன்றாம் இடத்தை ராமநாதபுரமும், 4வது இடத்தை கன்னியாகுமரியும், 5 ஆம் இடத்தை திருச்சி மாவட்டமும் பிடித்துள்ளது. சென்னையை எடுத்துக்கொண்டால் 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30ஆம் இடத்தில் உள்ளது.

பள்ளிகள் வாரியாக பார்த்தால், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அளவில் 2 ஆம் இடத்தையும், புதுச்சேரியில் முதலிடத்தை பிடித்து பரத்குமார் என்ற மாணவர் சாதித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+