அமித் ஷா வருகையை முன்னிட்டு.. புதுச்சேரியில் பலூன் வியாபாரி கைது.. பின்னணியில் பரபரப்பு காரணம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு பலூன் விற்றுக்கொண்டிருந்த வியாபாரி ஒருவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று ஒருநாள் பயணமாக அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார். நேற்று சென்னைக்கு விமானம் மூலம் அமித் ஷா வந்தார்.
சென்னையில் அமித் ஷாவிற்கு பாஜகவினர் மூலம் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதே சமயம் கோ பேக் அமித் ஷா என்ற டேக் இணையத்தில் நெட்டிசன்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது.

அமித் ஷா புதுச்சேரி
இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு அமித் ஷா இன்று புதுச்சேரி சென்றார். அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சாரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன.

இந்தி திணிப்பு
அப்போது அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாத அமித் ஷா திரும்ப போ என்றும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. கருப்பு பலூன்கள் பல இடங்களில் பறக்க விடப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது. அங்கு பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால் போலீசார் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பலூன் வியாபாரி
இந்த நிலையில் சாரம் பகுதியில் காஸ் பலூன் விற்க இருசக்கர வாகனத்தில் வந்த பலூன் வியாபாரி ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்சங்கர் கருப்பு பலூன் விற்க வந்ததாக குற்றஞ்சாட்டி அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

போலீசார் போராட்டம்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களின் கருப்பு கொடிகளை பறிக்க முயன்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே போல் கருப்பு சட்டை அணிந்து வந்தரின் சட்டையை போலீசார் கழற்றியதால் தள்ளுமள்ளு தீவிரமடைந்தது. தற்போது போராட்டங்களை தடுக்கும் வகையில் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications