ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை.. வீடியோ வெளியிட்டு நாராயணசாமி கடும் ஆவேசம்
புதுச்சேரி: தேர்தல் தோல்வி பயத்தால் பாஜகவுடன் அதிமுக சேர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் வருமானவரி சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், பாஜக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,

களங்கம் விளைவிக்க சோதனை
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது கண்டிக்கத்தக்கது. தோல்வி பயத்தால் பாஜக, அதிமுக வருமானவரித்துறையை ஏவிவிட்டு, ஸ்டாலின் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்து, மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பவே இந்த சோதனையை நடத்துகிறது. பாஜக எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

மக்கள் ஏற்க மாட்டார்கள்
எதிர்க்கட்சி தலைவர்களின் குடும்பங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்க தேர்தல் நேரத்தில் இந்த வேலையை செய்கிறார்கள். இது பாஜகவுக்கு கைவந்த கலை. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்ததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நெருக்கமான நேரத்தில் நடக்கும் இச்சோதனையின் உள்நோக்கம் மக்களுக்கு தெளிவாக தெரியும்.

ஸ்டாலின் முதல்வராவார்
பல சோதனைகளை திமுக கண்டுள்ளது. அவர்கள் அஞ்சபோவதில்லை. எதிர்த்து நிற்பார்கள். நீதி, நியாயம் வெல்லும். திமுக கூட்டணி வெல்லும் ஸ்டாலின் முதல்வராவார். பழிவாங்கும் நடவடிக்கையை மோடியும், அமித்ஷாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாஜகவும், அதிமுகவும் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் வருமாவரித்துறையை தேர்தல் நேரத்தில் ஏவி களங்கம் விளைவிக்கிறது.

களங்கம் விளைவிக்கவே
திமுகவிற்கு எதிராக சதி வருமானவரித்துறை, சிபிஐ முலம் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதையும், அவர்களின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தமிழக, புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அடுத்து திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவும், களங்கம் விளைவிக்கவே இதை செய்கிறார்கள். இவர்களது பகல் கனவு பலிக்காது " இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications