"திடீரென பிச்சைக்காரனாக இருந்த அதானி" இப்படியெல்லாம் சொல்வீங்களா.. ஒரே போடாக போட்ட ஹெச் ராஜா!
இந்து விரோதமாக எழுதிய பேனாவுக்கு சிலை வைக்கனுமா? என்று பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹெச் ராஜா, அதானி பங்குகள் குறித்த கேள்விக்கு நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.
புதுச்சேரி: கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் பேனா சின்னம் வைக்கக் கூடாது. இரண்டாவது இந்து விரோதமாக, ஆபாசமாக எழுதிய அந்த பேனாவிற்கு சின்னம் வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஹெச். ராஜா பங்கேற்றார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச் ராஜா பேசுகையில், கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் பேனா சின்னம் வைக்கக் கூடாது. இரண்டாவது இந்து விரோதமாக, ஆபாசமாக எழுதிய அந்த பேனாவிற்கு சின்னம் வைக்க வேண்டுமா? திமுக தலைவர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். இவர்களின் ஒழுக்கமற்ற வாழ்க்கையும், ஊழலையும் தான் நாம் பார்த்திருக்கிறோம். ஊழலுக்கும், ஒழுக்கமின்மைக்கும் பேனா நிமிர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்,

காங்கிரஸ் மீது விமர்சனம்
அதானி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹெச் ராஜா, முதல் இரண்டு மூன்று நாளாக பிரச்சனை செய்துவிட்டு இப்போது நாடாளுமன்றத்தில் விவாதத்தில் காங்கிரஸ் பங்கேற்றது ஏன்? ஏன் அவர்கள் தங்கள் முடிவில் இருந்து மாறினார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பாருங்கள். ஒன்றுமே இல்லாத பிரச்சனை இது.

அதானி பங்குகள்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை உள்ளிட்ட என்னவேண்டுமானாலும் கேட்கலாம் இல்லையா? ஏன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கைவிட்டன. காரணம் என்னவென்றால், பிரச்சனையே இல்லை. அதானி 8 லட்சம் கோடியை இழந்தார்னு சொன்னாங்க.. இப்ப 10 நாளைக்கு அப்புறம் 5 லட்சம் கோடியை மீட்டார்னு சொல்றாங்க.. அவருடைய பங்குகள் 900 ரூபாய்க்கு சரிந்தது அதனால் குறைந்தது. இப்போது 1800 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. விரைவில் 3000 ரூபாய்க்கு போய்விடும்.

யாருக்கு பாதிப்பு
எனவே திடீரென பிச்சைக்காரனாக இருந்த அதானி, பணக்காரன் ஆகிவிட்டார் என்று சொல்வார்களா? இதெல்லாம் பங்கு வர்த்தகத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள். எனக்கு இரண்டு கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லட்டும். வங்கி கணக்குல ஏதாவது வட்டி கட்டாமல் பாக்கி வைத்துள்ளாரா? இஎம்ஐ கட்டாமல் ஓவர்டியூ இருக்கா? இல்லையே.. ஆகவே வங்கிகள் ஏன் கவலைப்பட வேண்டும். வங்கிகளுக்கு வட்டி வந்து கொண்டிருக்கிறது. தவணையும் வந்து கொண்டிருக்கிறது. அதுல எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அதனால் மக்களோ பணத்திற்கு அவர்கள் பெற்ற கடனால் எந்த பாதிப்பும் இல்லை.

லாபம் எவ்வளவு
இப்போது எல்ஐசிஐ பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள். அவர்கள் முதலீடு செய்தது 36 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் அவர்கள் ஒரு ஷேர் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். 900 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால், அது 3000 ரூபாய்க்கு போகும் போது 10 ஷேரை விற்கிறார்கள். நாங்கள் இதுவரை ஷேரை வாங்கி விற்றதால் எங்களுக்கு 27 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக எல்ஐசி கூறியிருக்கிறது. லாபம் ஏறும் ஷேரை விற்கின்றன.

ஹெச் ராஜா பேட்டி
ஆகவே வங்கிகளோ, எல்ஐசியோ அதானியால் பாதிக்கப்படவில்லை. அதானி குழுமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இதுவரை வரவில்லை. இதை புரிந்து கொண்ட காங்கிரஸ் தலைமை, இனி மேலும் இதை பற்றி பேசி நாடாளுமன்றத்தை முடக்கினால் மக்களிடம் கெட்ட பெயர் வரும் என்பதால் அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்" இவ்வாறு ஹெச் ராஜா கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications