சந்திர பிரியங்காவை சுற்றும் சர்ச்சைகள்.. அமைச்சர் பதவி இருக்கா இல்லையா? குழப்பமா இருக்கே
புதுச்சேரி: அமைச்சர் பதவி ராஜினாமா.. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என சந்திர பிரியங்காவை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். சந்திரபிரியங்கா அமைச்சராக நீடிக்கிறாரா என்று குழம்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.
புதுச்சேரியின் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் சந்திர பிரியங்கா. அமைச்சராக பதவியேற்றது முதல் தனது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனக்கென்று ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர், முதல்வர் அலுவலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்தார். சந்திர பிரியங்கா தனது கடிதத்தில், "ஜாதி, பாலின ரீதியில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்" என்று குறிப்பிட்ட கருத்து கடும் விவாதத்தை கிளப்பியது. இது பற்றி முதல்வர் ரங்கசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார். முதல்வரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, மத்திய உள்துறைக்கு அக்கோப்பு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில்
இதுவரை சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியாகவில்லை. இவ்விவகாரம் தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது.
இதற்கிடையே, தான் அமைச்சர் பதவியில் செயல்பட்டது குறித்து 9 பக்க சாதனைப் பட்டியல் ஒன்றை வெளியிட்ட சந்திர பிரியங்கா, அதன்பின் தனது சமூக வலைதள 'அட்மின்' மூலம் ஆளுநர் தமிழிசையை விமர்சித்தார். அதன் பிறகு எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இந்தச் சூழலில், சந்திர பிரியங்கா வசித்து வரும் துய்மா வீதியில் உள்ள புதுவை அரசு இல்லத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
சட்டசபையிலும் அவரின் அறை இன்னும் காலி செய்யப்படாமல் இருந்து வருகிறது. அரசு கார், பாதுகாப்பு ஏதும் திருப்பி பெறப்படவில்லை. அவரும் ஒப்படைக்க வில்லை. இந்த சர்ச்சைக்கு இடையே சந்திர பிரியங்கர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். காரைக்காலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அமைச்சர் அலுவலகம் செய்தி குறிப்பு வெளியிட்டது. இது குழப்பத்தை அதிகரித்தது.

இதனிடையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் அளித்துள்ள பேட்டியில், சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதல்வர் என்.ஆர் ரங்கசாமியே கவனிப்பார் என்று கூறியுள்ளார். போக்குவரத்து துறை வெளியிட்டது தவறான தகவல் என்றும் சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் செல்வம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications