தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு தடை.. புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை: தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் தடை செய்யப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது சில செய்தித்தாள்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் ஆர்என்ஐ அனுமதியில்லாத செய்தித்தாள்களை தடை செய்ய வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி பேசுகையில் பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுவையில் தடை செய்யப்படும். தவறான செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்கள் மீது இந்த தடை நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி
2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 22 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கடந்த 10- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சட்டசபை வளாகத்திற்கு வந்து உரையாற்றினார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்கு அனுமதி
பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தான் சபை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதுவையின் பட்ஜெட் ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நேரடியாக இணையதளம் மற்றும் கேபிள் டிவி வழியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. புதுவையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு அதாவது 21 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 திட்டம் குறித்து அறிவித்தார்.

இலவச லேப்டாப்
அது போல் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தையும் பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். புதுவை மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications