பிள்ளையாரப்பா.. வைத்திலிங்கம் ஜெயிக்கணும்.. மொட்டை போட்ட காங்கிரஸ் நிர்வாகி!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் வெற்றி பெற வேண்டியும், மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகி சீனிவாசன் மொட்டை அடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Congress man tonsures his head for Vaithilingam

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அதேபோல் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

Congress man tonsures his head for Vaithilingam

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற வேண்டியும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டியும் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரும், காங்கிரஸ் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி துணைத்தலைவருமான சீனிவாசன் என்பவர் ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில் மொட்டையடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Congress man tonsures his head for Vaithilingam

இந்த மொட்டை போடும் வைபவத்தில் பெரும் திரளான காங்கிரஸாரும் கலந்து கொண்டு சீனிவாசனுக்கு மொட்டை போடப்பட்டதை வேடிக்கை பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+