பிறப்புறுப்பில் உடைந்த ஊசி! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 12 லட்சம் இழப்பீடு! மருத்துவமனைக்கு உத்தரவு
பிறப்புறுப்பில் உடைந்த ஊசியை அலட்சியமாக வைத்துவிட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ 12 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோார் ஆணையம் உத்தரவு
புதுவை: புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறப்புறுப்பில் உடைந்த ஊசியை வைத்துவிட்டதாக புகாரின்பேரில் அந்த பெண்ணுக்கு நிவாரணமாக குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருடன் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசியை வைத்து தைத்துவிட்டதாக தெரிகிறது.
உடலில் சில சிக்கல்களுடன் அந்த குழந்தை பிறந்ததால் ஐசியூ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அந்த குழந்தையை பார்க்கவே இல்லை. இதனிடையே டிசம்பர் 13 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

உடைந்த ஊசி
அதில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசி பதிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடமோ அவருடைய குடும்பத்தினரிடமோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஆனால் அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசியை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றது. 3 மணி நேரம் நிகழ்ந்த அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது.

ஊசியின் உடைந்த பாகம்
இந்த நிலையில் ஊசியின் உடைந்த பாகம் தனது உடலில் இருந்ததால் அளவில்லாத வேதனையை தான் அனுபவித்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்தார். இந்த நிலையில் உடைந்த ஊசி பெண்ணின் பிறப்புறுப்பில் பதிந்திருப்பதை ஒப்புக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அந்த பகுதியில் ஏற்பட்ட அழற்சியின் காரணமாக அறுவை சிகிச்சையின் போது ஊசியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினர்.

3 மாதம்
பிறப்புறுப்புக்கு அதிக சேதம் ஏற்படாமல் தற்காலிகமாக ஊசியின் துண்டை அகற்றாமல் விட்டுவிட்டு 3 மாதத்திற்கு பிறகு இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு புரிய வைத்துவிட்டு கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர். மேலும் அந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவையும் அந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்பதாகவும் உறுதி அளித்தது.

ரூ 12.25 லட்சம் இழப்பீடு
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை ஆணையம்,அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சிறிதும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கான தண்டனைக் காலமாக ரூ 2 லட்சமும் வழக்கு செலவுக்காக ரூ 25 ஆயிரமும் தனியார் மருத்துவமனை செலுத்த உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications