கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி.. திருநள்ளாறு நளன் குளம் 30 நாட்களுக்கு மூடல்
காரைக்கால்: கொரோனா வைரஸ் எதிரொலியாக உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நளன் குளம் அடுத்த 30 நாட்களுக்கு மூடப்பட்டுவிட்டது. குளத்தில் இருக்கும் நீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுத்து வருகின்றது. இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் சனிக்கிழமைகளில் லட்சத்திற்கும் அதிகமானவர்கள் திருநள்ளாற்றிற்கு வந்து நளன் குளத்தில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கொரோனோ பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் காய்ச்சல் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்கும்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கோயில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நளன் குளத்தில் இருந்த நீர் முழுவதையும் ராட்சத குழாய் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நளன் குளத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாதபடி 30 நாட்களுக்கு மூடியது கோயில் நிர்வாகம்.
இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாற்றிற்க்கு வந்துள்ளார்கள். குளத்திற்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications