பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை.. ‘கேன்சர்’ உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டதால் அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பஞ்சு மிட்டாய் குழந்தைகளால் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த பஞ்சு மிட்டாயில் விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.
அதில், அந்த பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி (RHODAMINE B) என்ற புற்றுநோயை உண்டாக்கக்கூடிய விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது. இது ஊதுபத்திகள் மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் ரசாயன நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதால் இதனை வடமாநில இளைஞர்கள் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
புற்றுநோயை உருவாக்கும் "பிங்க்" நிற பஞ்சு மிட்டாய்.. தப்பி தவறி கூட வாங்காதீங்க! கிளம்பிய புது பூதம்
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க, மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக, பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களிடம் இருந்து நச்சுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உடல்நலத்தைப் பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications