தோல்வி பயத்தால் ஜாதி கலவரத்தை பாமக தூண்டிவிடுகிறது.. இந்திய கம்யூனிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தோல்வி பயத்தால் ஜாதி கலவரத்தை பாமக தூண்டிவிடுகிறது.. இந்திய கம்யூனிஸ்ட்-வீடியோ

    புதுச்சேரி: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தோற்றுவிடும் என தெரிந்துவிட்டதால், ராமதாஸ் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு கலகத்தை ஏற்படுத்தி வருவதாக புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்தும், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்தும் கூட்டணி கட்சி தலைவர்கள் புதுச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தோற்போம்

    தோற்போம்

    தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையன்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பாமக ஒரு விலைபோன கட்சி. இந்த தேர்தலில் அவர்கள் தோற்றுப்போவோம் என்பதை உறுதிசெய்துவிட்டனர்.

    தொகுதி குறித்து கவலையில்லை

    தொகுதி குறித்து கவலையில்லை

    அவர்களுக்கு தேர்தலில் என்ன கிடைக்க வேண்டுமோ அது எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைத்துவிட்டது. ஆகவே தொகுதியை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

    பகிரங்கம்

    பகிரங்கம்

    எனவே தோற்றுப்போவோம் என்று உறுதிபட்ட நிலையில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுங்கள் என்றும், வன்முறையை செய்யுங்கள் என பாமக தொண்டர்களுக்கு அன்புமணி ராமராஸ் பொதுக்கூட்ட மேடையில் பகிரங்கமாக பேசியுள்ளது கண்டித்தக்கது.

    அணி தோற்பது

    அணி தோற்பது

    எனவே தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேசினார். மேலும் அன்புமணி இப்படி கூறுவதற்கு காரணம் அந்த அணி தோற்பது உறுதிப்பட்டுவிட்டது.

    பாமக

    பாமக

    அதேபோல் ராமதாஸ் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்களை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். காங்கிரஸ் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கிராமத்தில் நுழைய விடாமல் தடுக்க பாமகவினர் ரவுடிகளை ஏவி விடுகின்றனர்.

    கூட்டணி

    கூட்டணி

    கலகத்தை தூண்டிவிட ராமதாஸ் முயற்சி செய்கிறார். அந்த களகத்தை நாங்கள் எதிர்கொள்வோம் என முத்தரசன் கூறினார்.

    தொடர்ந்து பேசிய முத்தரசன், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது.

    பச்சை துரோகி

    பச்சை துரோகி

    ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல் என்ஆர் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பச்சை துரோகி என கூறியதாக தெரிவித்தார்.

    வெற்றி

    வெற்றி

    எனவே என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுக்கு துரோகம் இழைத்ததை மனதில் வைத்துக்கொண்டு அதிமுகவினர் என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிக்காமல் மதசார்பற்ற கூட்டணி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என முத்தரசன் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+