"தற்கொலையா".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்!
ஜெகத்ரட்சகன் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்
புதுச்சேரி: தற்கொலை செய்து கொள்வதாக நான் சொல்லவே இல்லை.. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் இடையே தமிழகத்தில் கூட்டணி இழுபறியில் உள்ளது.. புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.. ஜெகத் ரட்சகனையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க யோசித்து வருகிறது.

இதற்கு காரணம், புதுச்சேரியில் வன்னியர் வாக்குகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளதுதான்... ஜெகத் ரட்சகன் திமுகவில் சீனியர் என்பதாலும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.
இந்த சமயத்தில்தான் ஜெகத்ரட்சகன் பேசும்போது, புதுச்சேரியில் திமுக வெற்றி பெறாவிட்டால் இதே மேடையில் தற்கொலை செய்வேன் என்றார்.. ஜெகத் பேசியதை கேட்டு, திமுகவின் முக்கிய தரப்பு மட்டுமல்ல, காங்கிரஸ் தரப்பும் அதிர்ந்துவிட்டது.. இது விவாதப்பொருளாகவும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தது.
இந்நிலையில் தான் அப்படி பேசவில்லை என்று ஜெகத்ரட்சகன் விளக்கம் தந்துள்ளார்.. காரைக்கால் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம்.
மற்றபடி, யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். கூட்டணியில் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக போட்டியிடுவதாக நினைத்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். அப்படியானால், ஜெகத்ரட்சகன் தந்துள்ள இந்த விளக்கத்தை பார்த்தால், காங்கிரஸை இணைத்தே திமுக இந்த தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது..!
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications