இரவில் ட்விட்டரில் வென்டிலேட்டர் உதவிகேட்ட பெண்.. தாய் இறந்த துக்கத்திலும் உடனே உதவிய ஆளுநர் தமிழிசை
புதுவை: ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். எனவே அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் தற்போது சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது.

ட்விட்டர்
எனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை பார்த்த அவர் சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

சுகாதாரத் துறை செயலாளர்
இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பெண்ணுக்கு வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வென்டிலேட்டர்
தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பெண்ணுக்கு வென்டிலேட்டருன் கூடிய சிகிச்சைக்கு உதவி செய்த ஆளுநர் தமிழிசையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தனக்கு வந்த டிவிட்டர் கோரிக்கையை அந்த சுகாதாரத் துறைச் செயலாளருக்கு பார்வேர்டு செய்து, அவர் அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உதவி செய்துள்ளார்.

சுகாதாரத் துறை
அது போல் இந்த பெண்ணுக்கு உதவ முன்வந்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் தமிழிசை தெரிவித்துள்ளார். தனது தாய் இறந்த துக்கத்தில் இருந்த நிலையிலும் சமூகவலைதளங்களில் உள்ள கோரிக்கையை கண்டும் காணாமல் இல்லாமல் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்த தமிழிசையின் செயல் நெகிழ்ச்சி அளிப்பதாக உதவி பெற்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications