பிரசித்தி பெற்ற கோவில் தேரில் தீ.. மளமளவென பரவியதால் பதறிய பக்தர்கள்! புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் அம்மன் கோயில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் மீது பட்டாசு தீப்பொறி விழுந்ததால் விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது அந்தக் கோவில் தேர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் தேர் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரவு பூஜைக்காக பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் கூரை கொட்டகை மீது பட்டாசு தீப்பொறி விழுந்ததால் மளமளவென தீ பற்றி விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்து. அங்கிருந்த மக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர். சிறிதுநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications