நிஜ மீன்களை பிடிக்கும் பொம்மை மீன்கள்.. புதுச்சேரி மீனவர்களின் வித்தியாசமான யோசனை!
புதுச்சேரி: கடலில் நீந்தும் நிஜ மீன்களை பிடிப்பதற்காக, வண்ணமயமான பொம்மை மீன்களை தயாரித்து நூதன முறையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் புதுச்சேரி மீனவர்கள்.
Recommended Video
புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடைக்காலம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை உள்ளது.
இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதமே ஊரடங்கு அமலுக்கு வந்ததால், மீனவர்கள் அப்போது முதலே மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடி தடைக்காலம்
இதனிடையே தடைக்காலம் முடிய இன்னும் வெகு நாட்கள் இருப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைப்படகில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென என்று மீனவர்கள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஷிப்டு முறையில்
இந்நிலையில் மீனவ கிராமங்களில் தனித்தனியே பிரித்து குறிப்பிட்ட நாட்களில் சில கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க ஷிப்டு முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களும் சிறிய படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது கடலுக்கு செல்லும் மீனவர்களின் வலையில் பெரிய அளவில் மீன்கள் சிக்குவதில்லை. இருந்தபோதிலும் கிடைக்கும் மீன்களை கரைக்கு கொண்டுவந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

நூதன உத்தி
இதனிடையே பெரிய மீன்களைப் பிடிக்க மீனவர்கள் தூண்டில்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அதைவைத்து அவர்கள் மீன்பிடிப்பது நூதனமாக உள்ளது. அதாவது சிறிய அளவிலான. மரக்கட்டைகளை கொண்டு மீன் போன்று செய்து அதற்கு ஒளிரும் வண்ணங்களை பூசுகின்றனர். அதன் பின் அதனுடன் தூண்டில் முள்கள் இணைத்து கடலுக்குள் வீசுகின்றனர்.

ஏமாற்றி பிடிக்கிறார்கள்
இந்த மரக்கட்டை மீன் தண்ணீரில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போது அதை உண்மையான மீன் என்று நம்பி பெரிய மீன்கள் தங்களது வாயை திறந்து கவ்வி பிடிக்க முயல்கின்றன. அந்த சமயத்தில் மரக்கட்டை மீனுடன் இணைக்கப்பட்டிருக்கும் தூண்டிலில் பெரிய மீன் சிக்கி பிடிபடுகிறது. இதுபோன்று பல தூண்டில் முட்களை பயன்படுத்தி மீனவர்கள் பெரிய அளவிலான மீன்களை பிடித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications