புதுவை: புதுவை சட்டசபையில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது.
Recommended Video
புதுச்சேரி: பெரும்பான்மை ‘நஹி’... காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது… முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா!
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவின் எம்.எல்.ஏ. வெங்கடேசனும் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜினாமா செய்தார்.
ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
Feb 22, 2021, 4:19 pm IST
புதுவை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்
Feb 22, 2021, 11:58 am IST
டெபாசிட் இழந்த ஒருவரை நியமன எம்.எல்.ஏ.வாக்கி காங். ஆட்சியை கவிழ்த்துவிட்டனர்- வைத்திலிங்கம் எம்.பி.
Feb 22, 2021, 11:58 am IST
நியமன எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தோம்- சபாநாயகர் ஏற்கவில்லை- நாராயணசாமி
Feb 22, 2021, 11:57 am IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்தது
Feb 22, 2021, 11:52 am IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா
Puducherry Chief Minister submits resignation to the Lieutenant Governor after losing majority in the Assembly pic.twitter.com/Y2posu1zXQ
துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் நாராயணசாமி
Feb 22, 2021, 11:44 am IST
துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் முதல்வர் நாராயணசாமி
Feb 22, 2021, 11:28 am IST
நாராயணசாமி அரசு சரியாக செயல்படவில்லை என்பதே ஆட்சி கவிழ காரணம்- ரங்கசாமி
Feb 22, 2021, 11:28 am IST
புதுவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங். அரசு தோல்வி- என்.ஆர். ரங்கசாமி
Feb 22, 2021, 11:26 am IST
புதுச்சேரியில் நாராணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது
Feb 22, 2021, 11:26 am IST
காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு
Feb 22, 2021, 11:26 am IST
முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளியேறினர்
Feb 22, 2021, 11:26 am IST
துணை நிலை ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார் நாராயணசாமி
Feb 22, 2021, 11:02 am IST
புதுச்சேரி சட்டசபையில் அதிமுக- காங். எம்.எல்.ஏக்கள் இடையே காரசார விவாதம்
Feb 22, 2021, 10:56 am IST
மத்திய அரசு சிபிஐ, அமலாக்கப்பிரிவு உள்ளிட்டவற்றை ஏவிவிடுகிறது- நாராயணசாமி
Feb 22, 2021, 10:37 am IST
7-வது ஊதிய குழு பரிந்துரையை நிறைவேற்றியிருக்கிறது புதுவை அரசு- நாராயணசாமி
Feb 22, 2021, 10:37 am IST
புதுவைக்கான மத்திய அரசு மானியம் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது- நாராயணசாமி
Feb 22, 2021, 10:33 am IST
புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை- நாராயணசாமி
Feb 22, 2021, 10:31 am IST
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்- நாராயணசாமி
Feb 22, 2021, 10:31 am IST
பட்ஜெட்டில் அறிவித்த 95% திட்டங்களை நிறைவேற்றினோம்: நாராயணசாமி
Feb 22, 2021, 10:23 am IST
விவசாயிகளுக்கான அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு நாராயணசாமி உரை
Feb 22, 2021, 10:20 am IST
கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து காங்கிரஸ் அரசு பணியாற்றியது- நாராயணசாமி
Feb 22, 2021, 10:20 am IST
புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு, முன்னாள் ஆளுநர் கிரண்பேடி நெருக்கடி கொடுத்தனர்- நாராயணசாமி
Feb 22, 2021, 10:18 am IST
மாஜி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் மாடத்தில் அமர்ந்தார்
Feb 22, 2021, 10:18 am IST
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் தொல்லை கொடுத்து வந்தார்.
மத்திய அரசு நிதி அளிக்காதபோதும் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம்.
புதுச்சேரி மக்கள் நடக்கின்ற அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்- நாராயணசாமி.
Feb 22, 2021, 10:16 am IST
5 ஆண்டுகளில் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார் நாராயணசாமி
Feb 22, 2021, 10:15 am IST
புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி
Feb 22, 2021, 10:10 am IST
புதுச்சேரி சட்டசபை கூட்டம் தொடங்கியது
Feb 22, 2021, 10:02 am IST
நியமன உறுப்பினர்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை- அரசு கொறடா அனந்தராமன்
Feb 22, 2021, 10:02 am IST
புதுச்சேரி சட்டசபைக்கு முதல்வர் நாராயணசாமி வருகை
READ MORE
12:18 AM, 22 Feb
- சட்டசபையில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்திருந்தார்
6:06 AM, 22 Feb
- 2016 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்-7 ; அதிமுக 4 இடங்களில் வென்றது. புதுவை சட்டசபையில் 3 பேர் நியமன எம்.எல்.ஏக்கள். இவர்கள் பாஜகவினர் என்பதால் எதிர்க்கட்சிகள் பலம் 14 ஆக இருந்தது.
6:06 AM, 22 Feb
- 2019-ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் என்.ஆர். காங். கட்சியின் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பதவி பறிபோனது. இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெங்கடேசன் வென்றார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.
6:07 AM, 22 Feb
- 2020-ல் பாகூர் காங். எம்.எல்.ஏ தனவேலுவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நாராயணசாமி அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
6:07 AM, 22 Feb
- அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தனர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் அரசுக்கான ஆதரவு 16 ஆக குறைந்தது
6:07 AM, 22 Feb
- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார். இதனால் நாராயணசாமி அரசுக்கான பலம் 15 ஆக குறைந்தது.
6:07 AM, 22 Feb
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஞாயிறன்று பதவி விலகினர். இதனால் அரசுக்கான ஆதரவு 13 ஆக குறைந்தது.
6:07 AM, 22 Feb
- சபாநாயகர் சிவக்கொழுந்தை தவிர்த்து சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு 12 எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சிக்கு 14 எம்.எல்.ஏக்களும் ஆதரவு
6:08 AM, 22 Feb
- 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என்கிறது காங்கிரஸ். இதனடிப்படையில் அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள்; எதிர்க்கட்சிகளுக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்
6:08 AM, 22 Feb
- 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என்கிறது காங்கிரஸ். இதனடிப்படையில் அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள்; எதிர்க்கட்சிகளுக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்
6:08 AM, 22 Feb
- 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் 3 நியமன எம்.பி.க்களை கணக்கில் எடுக்காமல் இருந்தால் சட்டசபையின் மொத்த பலம் 24 எம்.எல்.ஏக்கள். இதனடிப்படையில் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது காங்கிரஸ் வாதம்
6:08 AM, 22 Feb
- உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நியமன எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்கிறது எதிர்க்கட்சிகள் தரப்பு. இதனடிப்படையில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து உள்ளது
6:09 AM, 22 Feb
- பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை சட்டசபை கூடுகிறது
6:09 AM, 22 Feb
- சட்டசபையில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்திருந்தார்
6:37 AM, 22 Feb
புதுவை சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.
புதுவை காங்கிரஸ் - திமுக கூட்டணியின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா.
புதுவை சட்டடசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.
7:02 AM, 22 Feb
புதுவை சட்டசபை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆகும்.
2016 ஆம் ஆண்டு திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
7:08 AM, 22 Feb
அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நாராயணசாமி அரசுக்கு சிக்கல்.
ஆட்சி கவிழுமா தப்புமா என்பது இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான் தெரியும்.
7:28 AM, 22 Feb
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றது.
காங்கிரஸ் மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிட்டது.
திமுக 9 இடங்களில் போட்டியிட்டு வெறும் இரு இடங்களில் மட்டுமே வென்றது.
7:34 AM, 22 Feb
ஓரிரு மாதங்களில் புதுவையில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
புதுவை சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கும் போது புதுவைக்கு அறிவிப்புகள் வெளியாகும்.
8:08 AM, 22 Feb
மக்களாட்சியை கவிழ்க்க பாஜகவின் சதியை அம்பலப்படுத்தவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங். ஒப்புதல்?
8:08 AM, 22 Feb
புதுவை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு கவிழ வாய்ப்பு.
நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெள்ள தெளிவாக அவருக்கே தெரியும்.
8:28 AM, 22 Feb
நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தோல்வியுற்றால் என்ன நடக்கும்?.
என்ஆர் காங்- அஇஅதிமுக- பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்குமா?.
சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புகள் குறைவு.
ஒரு ஆட்சியை கவிழ்த்துவிட்டு புதிய ஆட்சி அமைத்தால் எதிர்கட்சிகளால் மக்களின் ஆதரவை பெற முடியாது.
8:34 AM, 22 Feb
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த மல்லாடி கிருஷ்ணராவின் ராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
மல்லாடி கிருஷ்ணராவின் ராஜினாமாவை ஏற்காத சபாநாயகர் வி பி சிவக்கொழுந்து.
ராஜினாமாவை திரும்ப பெறக் கோரி மல்லாடிக்கு சிவக்கொழுந்து கோரிக்கை.
காங்கிரஸ் - திமுக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மல்லாடியிடம் கேட்ட சிவக்கொழுந்து?.
8:50 AM, 22 Feb
புதுவை சட்டசபையின் மொத்தமுள்ள பலமான 30 இல் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ 2020இல் தகுதி நீக்கம்.
தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால் சட்டசபையின் பலம் 29 ஆக குறைந்தது.
8:51 AM, 22 Feb
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களும் திமுகவின் ஒரு எம்எல்ஏவும் ராஜினாமா.
இந்த 6 பேர் ராஜினாமா செய்ததால் சட்டசபையின் பலம் 23 ஆக உள்ளது.
இந்த 23-இல் பெரும்பான்மைக்கு 12 தேவைப்படுகிறது.
இந்த 12 பேர் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள 11 பேர் எதிர்க்கட்சியினர்.
எனவே புதுவை அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பது காங்கிரஸ் வாதம்.
8:51 AM, 22 Feb
பாஜகவின் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை சேர்த்தால் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
நியமன எம்எல்ஏக்களை சேர்த்தால் பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சியினர் வாதம்.
8:52 AM, 22 Feb
நியமன எம்எல்ஏக்களையும் சேர்த்தால் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உயரும், ஆளும் அரசின் பலம் 12 ஆக உள்ளது.
நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை வைத்தே புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
9:10 AM, 22 Feb
பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதுவை சட்டசபை.
புதுவை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கைகளை உயர்த்துவதன் மூலம் நடைபெறும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட தமிழிசை உத்தரவு.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சபாநாயகர் வாக்களிப்பார்.
9:41 AM, 22 Feb
சட்டசபைக்கு புறப்பட்டார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
Puducherry CM V.Narayanasamy leaves for the Legislative Assembly from his residence