பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்ய.. புதுச்சேரி, காரைக்கால் மட்டுமல்ல, சென்னையிலும் வாக்குப் பதிவு!
புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்றபடி ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பதவிகாலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்நாட்டின் 12 வது அதிபரை தேர்வு செய்தவதற்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடந்தது.

2 ஆம் கட்ட தேர்தல்
இதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அந்த தேர்தலில் தற்போதைய அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான இமானுவேல் மேக்ரான் மற்றும் வலதுசாரி பெண் வேட்பாளர் மெரின்லி ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நீடித்தது. ஆனால் யாருமே 50 சதவீத வாக்குகளுக்கு அதிகமாக பெறாததால், பிரான்ஸ் நாட்டு தேர்தல் விதிகளின்படி இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் ஆர்வத்தோடு வாக்குப்பதிவு
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பகுதிகளில் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 4,600-க்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை கடற்கரை சாலையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகம் மற்றும் பிரான்ஸ் பள்ளியில் தலா 2 வாக்குச்சாவடிகள் வீதம் 4 வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.

காரைக்கால் வாக்குப்பதிவு
இந்த வாக்குச்சாவடிகளில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல், காரைக்காலிலும் ஒரு மையம் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கும் மக்கள் ஆர்வமாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையிலும் பிரான்ஸ் தேர்தல்
அதேபோல் சென்னையிலும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தோ - பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவில் பிரான்ஸ் குடியிரிமை பெற்ற மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

யார் வென்றாலும் சாதனை வெற்றி
இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த 20 ஆண்டுகளாக பிரான்ஸில் தொடர்ந்து 2 முறை ஒருவர் அதிபராக பதவி வகித்தது இல்லை. இதில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றிபெற்றால் அந்த பெருமையை அடைவார். அதேபோல் இதில் மெர்லி வென்றால் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications