புதுவையில் ஜி20 அறிவியல் மாநாடு கூட்டம் தொடங்கியது.. 5 இடங்களில் 144 தடை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுவையில் இன்று ஜி20 அறிவியல் மாநாடு கூட்டம் தொடங்கியது. இதில் 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு நடக்கிறது.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த மாநாடு தொடங்கும் என தெரிகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகிறது. அதன்படி புதுவையில் இன்று ஜி20 பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது. புதுவையில் மரப்பாலத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணிக்கு ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு தொடங்கியது. தேசிய அகாதெமி தலைவர் அசுதோஷ் தலைமையில் இந்த மாநாடு தொடங்கியது.

வெளிநாட்டு பிரதிநிதிகள்

வெளிநாட்டு பிரதிநிதிகள்

இதையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகள் புதுவைக்கு நேற்றைய தினம் விமானங்களில் வந்தடைந்தனர். அவர்களை புதுவை அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, ஆட்சியர் வல்லவன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்று விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

இந்த கூட்டத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நிபுணர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். புதுவை அரசு அதிகாரிகளுக்குக் கூட அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அந்த இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

மாநாடு

மாநாடு

மாநாடு நடைபெறும் விடுதியின் முன்பகுதியில் புதுவையின் அடையாளமான ஆயி கட்டட வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் பிரதமரின் உருவம் மணல் சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை நகரம் பொலிவுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

 சிக்கிம்

சிக்கிம்

புதுவையை தொடர்ந்து சிக்கிமில் உள்ள அகர்தலா, லட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவு, மத்தியபிரதேசத்தில் உள்ள போபால் ஆகிய இடங்களில் அறிவியல் 20 கூட்டம் நடத்தப்படுகிறது. இறுதி கூட்டம் கோவையில் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாநாடு

மாநாடு

இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+