டபுள் டிஜிட் சீட் வேணும்.. அழுத்தமாக கேட்ட அமித் ஷா.. வழியே இல்லை.. இறங்கிப்போன புதுச்சேரி ரங்கசாமி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் களத்தில் நிலவி வந்த இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான 20 நிமிட அதிரடி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாஜகவின் 'இரட்டை இலக்க' கோரிக்கைக்கு முதலமைச்சர் ரங்கசாமி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது.

Puducherry Assembly Election 2026

அமித் ஷாவின் 'மாஸ்டர் பிளான்'

கடந்த 2021 தேர்தலின் போது ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பாஜக, இந்த முறை புதுச்சேரியில் தனது பலத்தை நிரூபிக்க இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட 6 இடங்களில் பாஜக வென்றது. இந்த நிலையில் காரைக்காலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, ஒரு தனியார் விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமியை அமித் ஷா சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த காலங்களில் நிலவிய மனக்கசப்புகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆளுநர் கோப்புகளைத் திருப்பி அனுப்பியது மற்றும் தவெக (TVK) உடனான கூட்டணி வதந்திகள் குறித்த அதிருப்திகளை ரங்கசாமி முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அமித் ஷாவின் அழுத்தமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரங்கசாமி பாஜகவின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த முறை பாஜகவுக்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.

எத்தனை இடங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் தான் வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் பாஜக 10 தொகுதிகள், அதிமுகவுக்கு 2 தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

அதிமுகவினரை அதிரவைத்த ஒதுக்கீடு

இந்தக் கூட்டணியில் மற்றொரு முக்கிய திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு புதுச்சேரியில் செல்வாக்கை இழந்து வரும் அதிமுக-வுக்கு மிகக் குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாத நிலையில், இந்த முறை கூடுதல் இடங்களைக் கேட்டு அதிமுக போராடி வந்தது. ஆனால், தற்போதைய முடிவின்படி அதிமுக-வுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பாஜகவின் ஆதிக்கத்தால் அதிமுக ஓரங்கட்டப்படுவதாக அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறாமல் அதிமுக தலைமை மௌனம் காப்பது தொண்டர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் லட்சிய ஜனநாய கட்சிக்கும் (LJP) 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி இறுதி: ரங்கசாமி பேட்டி

அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும்" எனச் சுருக்கமாகக் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக தலைவர் ராமலிங்கம் ஆகியோரை அழைத்து அமித் ஷா அடுத்தகட்ட தேர்தல் வியூகங்களை வகுத்தார். இந்தத் தொகுதிப் பங்கீடு புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரங்கசாமியின் செல்வாக்கை பாஜக கட்டுப்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+