ஆன்லைன் கேம் விளையாடியபோது மூளை நரம்பு வெடித்ததால் புதுவை மாணவன் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்
புதுவை: மூளையில் நரம்பு வெடித்ததால் வீடியோ கேம் விளையாடிய புதுவை மாணவன் பலியானதால பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (16).
தனியார் பள்ளி மாணவர். தற்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் போனில் வகுப்பை கவனிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் கேமை விளையாடுவது வழக்கமாம்.

ஃபயல்வால்
இந்த நிலையில் நேற்று முன் தினம் இவர் தனது மொபைல் போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமை தொடர்ந்து 4 மணி நேரம் விளையாடி கொண்டிருந்தார். காதில் ஹெட்செட்டை வைத்துக் கொண்டு ஆன்லைன் கேம் விளையாடிய தர்ஷன் திடீரென மயங்கினார்.

பரிசோதித்த மருத்துவர்கள்
இதையடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு தர்ஷன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடல் பிரேத பரிசோதனை
இதையடுத்து தர்ஷனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறுவனுக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

கோரிக்கை
அதில் சிறுவனின் மூளை நரம்பு வெடித்து சிதறியதால் அவர் உயிரிழந்ததாக அறிக்கையில் கூறப்படுகிறது. 4 மணி நேரமாக மூளைக்கு சிறிதும் ரெஸ்ட் கொடுக்காமல் இது போல் கேம் விளையாடியதால் அவரது நரம்பு வெடித்திருக்கலாம் என்கிறார்கள். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications