புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சவால் விடுத்துள்ளார். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன் என்றும் அப்படி இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்

    திமுகவின் மூத்த நிர்வாகியான ஜெகத்ரட்சகன் தற்போது எம்.பியாக இருக்கிறார். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்த ஜெகத்ரட்சகன், இறக்கும் வரை திமுகவில்தான்இருப்பேன் என்று சொன்னார். இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் எம்.பியை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    I will commit suicide if DMK does not rule in Pondicherry - Jagathrakshakan MP

    புதுச்சேரியில் தற்போது திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது இந்த கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக தனது கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தான் ஆட்சியில் அமர முடிவெடுத்திருக்கிறது.

    திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர்,
    புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.

    புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியிருக்கிறார் அழுத்தமாக.

    புதுச்சேரி முன்பு சொர்க்கபுரியாக இருந்தது தற்போது நரகமாகிவிட்டது என்று கூறினார். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும் என்றும் சொன்னார்.

    I will commit suicide if DMK does not rule in Pondicherry - Jagathrakshakan MP

    புதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை குறை சொல்லும் வகையில் பேசியுள்ளார் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஜெகத்ரட்சகனின் பேச்சால் புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் பேச்சு குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது குறித்து அவர் கருத்து கூற மருத்து விட்டார்.

    தற்போது திமுக உறுப்பினர்களின் தயவில் காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது. கூட்டணி முறிந்து திமுக எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெறும் பட்சத்தில் நாராயணசாமியின் ஆட்சி கவிழும் அபாயம் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+