Amit Shah: அமித்ஷாவை நோக்கி பறந்த டிரோன்.. காரைக்காலில் சுட்டு வீழ்த்திய வீரர்கள்..சிக்கிய நபரிடம் விசாரணை
காரைக்கால்: காரைக்காலில் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பறந்து வந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்த டிரோனை அமித்ஷாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த என்எஸ்ஜி வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும் டிரோன் பறக்கவிட்ட நபரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

காரைக்கால் சந்தை திடல் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அப்போது அமித்ஷாவை நோக்கி டிரோன் பறந்து வந்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்
இதனை பார்த்த அமித்ஷாவின் பாதுகாவலர்களான என்எஸ்ஜி வீரர்கள் டிரோன் எதிர்ப்பு துப்பாக்கியை வைத்து சுட்டு வீழ்த்தினர். மேலும் டிரோன் பறக்கவிட்ட நபர்? அவரது பின்னணி? என்பது பற்றி என்எஸ்ஜி வீரர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
லோகேஷிடம் விசாரணை
அதில் டிரோன் பறக்கவிட்ட நபரின் பெயர் லோகேஷ் என்பதும், அவர் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
ரகசிய இடத்தில்...
இதையடுத்து அவரை போலீசார் விரைந்து பிடித்தனர். அவர் எதற்காக டிரோனை பறக்கவிட்டார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடையை மீறி பறந்த டிரோன்
முன்னதாக அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அமித் ஷா வரும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
சுமார் 700 புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் 400 மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இருப்பினும் அதனை தாண்டி டிரோன் பறந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications