பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு வந்த குட்நியூஸ்.. கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு
புதுச்சேரி: கோடை வெயில் அதிரித்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது முழு ஆண்டு தேர்வு என்பது நடந்து முடிந்து விட்டது.
இருப்பினும் கூட பள்ளிகள் இந்த மாதத்தின் 30ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டது. இதனால் ஆண்டு இறுதி தேர்வு முடிந்த பிறகும் கூட பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் தொடர்ந்து சென்று வந்தனர்.

இதற்கிடையே தான் புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் புதுச்சேரியில் நாளை முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ஆ நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) வரை தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications