செவிலியர்களை கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் கிரண்பேடி.. சேவை சிறக்க வாழ்த்து.. நெகிழ்ச்சி!
புதுச்சேரி: உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் செவிலியர்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையெடுத்து கும்பிட்டு அவர்களின் சேவை சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். இதில் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் கிரண்பேடி, செவிலியர்களை கையெடுத்து கும்பிட்டு தலை வணங்கி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் ''இது உங்களுடைய நாள். இந்நாளில் எங்களுக்காக சேவை புரியும் உங்களுக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் ஒருவரை மட்டுமே காக்க முடியும்.

அது அன்பின் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஆயிரம் பேருக்கு உளமாற சேவை செய்கிறீர்கள்'' என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். செவிலியர்களுக்கு வாழ்த்து கூறும் வீடியோவை தனது வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ள கிரண்பேடி, பச்சை, நீலம், காக்கி மற்றும் வெள்ளை கோட் அணிந்துள்ளவர்களுக்கு வீர வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications