புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவை வந்தடைந்தார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. போராட்டக்காரர்கள் பலர் வெளியேற்றம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Narayanaswamy slams Kiran Bedi | ஆளுநர் கிரண்பேடிக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி சவால்

    புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில துணை நிலை ஆளுநர் எதிராக இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி போராடி வருகிறார். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    Kiran Bedi vs Narayanasamy: Police protection increased outside Governor house in Puducherry

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பொது மக்களும் கணிசமான அளவில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

    ஆளுநர் மாளிகைக்கு வெளியே இந்த போராட்டம் நடப்பதை அடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்களுக்கு பின் இன்றுதான் அவர் புதுச்சேரி திரும்பி உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், கார் மூலம் புதுச்சேரி வந்தடைந்தார்.

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளனர். இன்று மாலை இவர்கள் 6 மணி அளவில் ஆலோசிக்க உள்ளனர். இதற்கான முறையான அழைப்பு நாராயணசாமிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆளுநர் மாளிகை அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தர்ணா செய்யும் கட்சி தலைவர்களை தவிர மற்றவர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். முதல்வர் நாராயணசாமியே பேசி கட்சித்தலைவர்கள் தவிர மற்ற அனைவரையும் வெளியேறும்படி தெரிவித்து வருகின்றார், இன்று மாலை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்ய உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Lt Governor Kiran Bedi vs CM Narayanasamy: Police protection increased outside Governor house in Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X