புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சிகளே.. எங்களுக்கும் அரசியலில் வாய்ப்பளியுங்கள்.. திருநங்கை அப்சரா ரெட்டி கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்த திருநங்கை அப்சரா-வீடியோ

    புதுச்சேரி: திருநங்கைகள் அரசியல் மற்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளை அனைத்து கட்சிகளும் ஏற்படுத்தி கொடுங்கள் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி இன்று மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை, சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்ந சந்திப்பின்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.

    manila congress general secretary apsara reddy meet cm

    முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அப்சரா ரெட்டி, பெண்களை இழிவுபடுத்தும் பாஜகவினரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. திருநங்கைகள் அரசியலுக்கு வரவேண்டும். அனைத்து கட்சிகளும் அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.

    திருநங்கைகளுக்கு அரசியல் மற்றும் அதிகாரங்களுக்கு வரக்கூடிய சக்தி உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அனைவரும் ஏற்படுத்தி தர வேண்டும்.

    manila congress general secretary apsara reddy meet cm

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என தெரிவித்தார்.

    manila congress general secretary apsara reddy meet cm


    இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அப்சரா ரெட்டி, புதுச்சேரியில் மகிளா காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    manila congress general secretary apsara reddy meet cm
    English summary
    Apsara Reddy has called all parties to give Transgenders a chance in Politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X