வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே செம ஷாக்.. 80க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு கொரோனா.. அடுத்து என்ன?
புதுச்சேரி: வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், புதுவையில் 80க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் நடைபெறுகிறது. ஏற்கனவே, பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு சமயங்களில் தேர்தல் ஆணையம் சரிவர செயல்படவில்லை என்றும் இதன் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின்போது, கடும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. முடிவுகள் வெளியான பிறகு கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், வேட்பாளர்கள்,
அதாவது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டதற்கான சான்று அல்லது வாக்கு எண்ணிக்கை தேதிக்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் முகவர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் முகவர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 1,546 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 84 முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால், அவர்களுக்குப் பதில் வேறு முகவர்கள் தேர்வு செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications