'ஷாக்..' ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்.. மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாயும் பலி
புதுச்சேரி: மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியைக் கேட்டு தாயும் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வேலு- முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 27 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார்.

ஜீவா நேற்று மாலை தனது நண்பர்களுடன் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஜீவாவின் நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஜீவா மட்டும் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அந்த இடம் சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதை அறியாத ஜீவா ஆழமான பகுதிக்குச் சென்றதால் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக தவளகுப்பம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஜீவாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜீவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதய நோய் உள்ள ஜீவாவின் தாயார் முத்துலட்சுமி (50) மகன் ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் அவரை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று காலை ஜீவாவின் உடல் அரியாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜீவாவின் தாயார் முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications