75-வது சுதந்திர தினம்... 75 அடி ஆழ்கடலில் தேசியக் கொடி... நீச்சல் வீரர் அரவிந்த் அசத்தல்!
புதுச்சேரி : நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றி வைத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வைரலாகி, அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Recommended Video
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் சுதந்திர தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றி அசத்தியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் சென்னையில் temple adventure என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி பள்ளியை அரவிந்த் என்பவர் நடத்தி வருகிறார். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்துள்ளார்.
உலக மிதிவண்டி நாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுவை - தமிழக ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் மிதிவண்டி ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள். கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், தற்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடலில் 75 அடி ஆழத்தில் அரியாங்குப்பம் அருகே ஆழ்கடலில் தேசியக் கொடியை நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் ஏற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications