ஓமிக்ரான்:கவலைப்படாத புதுச்சேரி என்.ஆர்.காங்.-பாஜக அரசு- சரக்கு விற்பனை நேரத்தை நீட்டித்து உத்தரவு!
புதுச்சேரி: ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் மதுபான பார்கள், ஹோட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு நாளில் மக்கள் கூட்டம் அலைமோதும்; வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிவார்கள்; ஆகையால் புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று முதலாவது ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங். பாஜக கூட்டணி அரசு, மதுபானங்கள் விற்பனை நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
புதுச்சேரியில் பார்களில் அதிகாலை 1 மணிவரை மதுபானங்கள் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் இரவு 11 மணிக்கு மேல் மதுவிற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications