புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை... முதல்வர் நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Not allowed For Hydro carbon project Even Come with army Says CM Narayanasamy

இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் எந்த பணியையும் செய்ய இயலாது என்றார்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். எங்கள் அனுமதியின்றி பணியை தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவோம். இதை சட்டமன்றத்திலும் உறுதியளித்துள்ளேன். புதுச்சேரிக்கு தேவையான நல்ல திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்.

பாஜகவை விடுங்க.. பேஸ்மென்ட் ஆடுது.. அதை சரி பண்ணுங்க.. அதிமுக தொண்டர்கள் சிம்பிள் எதிர்பார்ப்பு! பாஜகவை விடுங்க.. பேஸ்மென்ட் ஆடுது.. அதை சரி பண்ணுங்க.. அதிமுக தொண்டர்கள் சிம்பிள் எதிர்பார்ப்பு!

புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

English summary
Puducherry CM Narayanasamy Said that Not allowed For Hydro carbon project Even Come with army
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X