ரோட்டில் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. புதுவையில் பரபரப்பு
Recommended Video
புதுவை: புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வீதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியை அருகே சூரமங்கலம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை விரட்டியபோது, சாலையில் சென்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோரை அந்த நாய் துரத்தி துரத்தி கடித்து குதறியுள்ளது.


இதனால் சாலையில் சென்றவர்கள் நாலாபுறமும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பலரை கடித்து குதறிய அந்த நாய் மொளப்பாக்கம், நெட்டப்பாக்கம் கிராமத்திற்கு சென்றது. அங்கும் சிலரை கடித்து குதறியுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் கடிக்கு போதிய மருந்துகள் இருப்பில் இல்லாததால் பாதிக்கப்பட்ட அனைவரும் புதுச்சேரியிலுள்ள தலைமை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் அதிகமாக நாய் தொல்லை இருப்பதாக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை



அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. உடனடியக தெருவில் வெறி பிடித்து சுற்றி வரும் நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஒரே நேரத்தில் ஒரு நாய் 30-க்கும் மேற்பட்டோரை கடித்த குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications