ரூ 30000 கோடியில் சூப்பர் திட்டம்! இனி புதுவை - சென்னை செல்ல 2 மணி நேரம்தான்! பிரதமர் மோடி உறுதி
புதுவை: புதுவையிலிருந்து சென்னை 2 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் பொங்க தெரிவித்தார். மேலும் சென்னையிலிருந்து புதுவை, காரைக்கால் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்கு மோடி புறப்பட்டார்.

அங்கு லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதான திடலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீஅரவிந்தரின் 150 ஆவது பிறந்த ஆண்டை நினைவு கூறும் வகையில் புதுவை ஆரோவில்லில் நடந்த மகோத்சவத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் அரசு விழாவில் மோடி பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் புதுவை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இரட்டை என்ஜின் ஆட்சியே புதுவையில் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
புதுவை ஒரு வசந்த பூமி. வார இறுதியில் புதுவை வருவதை சுற்றியுள்ள மாநில மக்கள் விரும்புகிறார்கள். புதுவையில் உள்ள இரட்டை என்ஜின் அரசு சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது. ஆன்மீக சுற்றுலா, இயற்கை சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ரேஷன் கடைகளில் அரிசி கூட இல்லாமல் இருந்தது. காங்கிரஸ் - திமுக ஆகியவை புதுவை மாநில வளர்ச்சிக்கு வேகத்தடைகள் போல் இருந்தன. இரு கட்சிகளும் தொடர்ந்து ஊழலில் திளைத்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர். குற்றங்கள் அதிகரிப்பு, அரசியல் நிலையற்றதன்மை போன்ற நிலைதான் இருந்தது. புதுவையை மருத்துவ சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏடிஎம்மாக புதுவையை காங்கிரஸ் மாற்றியிருந்தது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் - திமுக துடிக்கின்றன.
புதுவை, காரைக்காலில் போக்குவரத்தை சீர்படுத்த திறன்மிகு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ 440 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலைகளை மேம்படுத்த ரூ 30 ஆயிரம் கோடி செயலவு செய்யவுள்ளோம்.
இந்த பணிகள் நிறைவடைந்தால், இனிமே புதுவை - சென்னை இடையிலான பயண நேரம் 2 மணி நேரமாக இருக்கும். புதுவை சுற்றுலாத்துறை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப்படும்.
திமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் தொடர் ஊழல், மோசடி என பட்டியல் நீள்கிறது. புதுவை ஒரு டபுள் என்ஜின் சர்கார். இந்த பணியில் உங்களுடன் இணைந்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என கூறினார் பிரதமர் மோடி. இந்த பணிகளை முடித்துக் கொண்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை மண்டேலா நகரில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு செல்கிறார். இதனால் சென்னை, புதுவை இடையே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications