மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி மத்திய பல்கலையில் போலீசார் தடியடி
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளை போலீசார் தாக்கியதோடு, அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரவில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார், மாணவர்களின் தலைமுடியைப் பிடித்து, கால்களால் எட்டி உதைத்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அண்மைக்காலமாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வருகின்றன. சமீபத்தில் கூட காரைக்காலில் உள்ள பல்கலையில் நடந்த அத்துமீறல் குறித்து மாணவி ஒருவரின் ஆடியோ வைரலானது. இந்தப் புகாரை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து அறிவிப்பு வெளியிட்டது.

அதில் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, கலைந்து சென்றால், துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கல்லுாரி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் 5 நுழைவு வாயில்களை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ராஜ்னீஷ் புட்டானி ஆகியோர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கினர். அதேசமயம் நிர்வாக கட்டடத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை வெளியேற மாணவர்கள் தடங்கல் செய்யவில்லை. மதியம் 2.30 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் நள்ளிரவிலும் நீடித்ததால் பரபரப்பு நிலவியது.
பல்கலைக்கழகத்தில் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் உள் விசாரணை குழு காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், தைரியமாக புகார் கொடுக்கும் மாணவிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி உள் விசாரணை குழுவில் மூன்று மாணவர்கள் இடம்பெற வேண்டும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக உள் விசாரணை குழுவில் மாணவர்கள் இடம்பெறவில்லை. இதனால், வெளிப்படைத்தன்மை இல்லாமல் விசாரணை மர்மமாகவே நடத்தி முடிக்கப்படுகிறது. எங்களுக்கும் இக்குழு மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில், துணை வேந்தர் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. உள் விசாரணை குழுவில் மாணவர்களை இடம் பெறச் செய்து மாற்றி அமைக்கும் வரை இந்த விசாரணை குழுவை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும். பிரச்சனை தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனக் கூறினர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மாணவிகள்
பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், போலீசார் இடையே நள்ளிரவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவிலும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார், மாணவர்களின் தலைமுடியைப் பிடித்து, கால்களால் எட்டி உதைத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications