100 போட்டோ..சபல ஆண்கள் தான் குறி! மொத்தமாய் ஆட்டைய போட்ட கடலூர் காயத்ரி! விக்கித்து நின்ற விக்னேஷ்!
புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளருக்கு பல பெண்களின் புகைப்படங்களை அனுப்பி ஆசை காட்டி பணம் பறித்த பலே கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களிடம் லட்சக்கணக்கில் அந்தப் பெண் பண மோசடி செய்து இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மனிதர்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப் போன செல்போனால் கள்ளக்காதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப், பேஸ்புக் என பல்வேறு செயலிகளில் ஆண்கள் அடையாளம் தெரியாத பெண்களுடன் ரீல்ஸ், டூயட் செய்து உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது.சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர். அவ்வாறு உலா வரும் பெண்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
சில நேரங்களில் பெண்கள் மீது சபலப்படும் ஆண்கள், பணத்தையும், தங்கள் மரியாதையையும் தொலைத்து விட்டு, ஏச்சுக்கு அச்சப்பட்டு அமைதியாய் சென்று விடுகின்றனர். இதனை பயன்படுத்தி பல பெண்கள், ஏன் ஆண்கள் கூட ஆண்களை ஏமாற்றி வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் புதுச்சேரியில் அரங்கேறி இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தஞ்சையைச் சேர்ந்த விக்னேஷ் மேனேஜராக பணியாற்றி வந்திருக்கிறார்.
அவர் கடந்த சில நாட்களாக சில சமூக வலைதளங்களில் பெண்களின் ரீல்ஸ் உள்ளிட்டவற்றுக்கு லைக் போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண்களுடன் நேரத்தை செலவழிக்க விருப்பமா? எங்களிடம் நிறைய பெண்கள் இருக்கிறார்கள் என விக்னேசுக்கு மெசேஜ் வந்திருக்கிறது. மெசேஜை பார்த்த விக்னேஷ் சபலத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார்.
அப்போது பேசிய பெண் ஒருவர், புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் தங்களது வீடு இருப்பதாகவும், அங்கு ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இருப்பதாகவும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார். இதை அடுத்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்த அனுப்பிய விக்னேஷ் பத்தாயிரத்தில், ஐந்தாயிரம் ரூபாய் அட்வான்சாக ஜி பே மூலம் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த பெண் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற விக்னேஷ் தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து பல மணி நேரம் அங்கு காத்திருந்த நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்திருக்கிறார் விக்னேஷ். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுர்த்து துரிதமாக விசாரணை மேற்கொண்ட போலீசார் மேனேஜர் விக்னேசை ஏமாற்றியது கடலூரைச் சேர்ந்த காயத்ரி என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காயத்ரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி ஆறு மாதத்தில் மற்றும் நான்கு லட்சம் ரூபாயை சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் கணக்குகளை தொடங்கி அதில் வேறு பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் காயத்ரி கைது செய்யப்பட்ட தகவலையடுத்து அவர் மீது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக புகார்கள் குவிந்து வருகிறது. இதுதொடர்பாக பலர் ஆன்லைன் மூலமும் புகார் அளித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை காயத்ரி மோசடிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications