மூதாட்டிகள் தான் குறி! ஒன்றல்ல இரண்டல்ல..4 மூதாட்டிகளை பலாத்காரம் செய்த கொடூரன்? புதுச்சேரியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : புதுச்சேரியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த வாலிபரை இரண்டு மாதங்களுக்கு பின்னர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் உள்ள வயலில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி, வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து அந்த மூதாட்டி பாகூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இளைஞர் கைது

இளைஞர் கைது

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு கடலுார் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) என்கிற இளைஞரை பாகூர் குற்றபிரிவு போலிசார் நேற்று மாலை கடலூர் பகுதியில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

அதில் சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் இருப்பதாகவும், கடந்த ஜனவரி மாதம் 29 ம் தேதி திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன், கடலுார் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு, ஆராய்ச்சிக்குப்பம் சாராயக் கடையில் மது அருந்துவிட்டு செல்லும் போது வயலில் வேலை பார்த்த கொண்டிருந்த மூதாட்டியிடம் மொபைல் போன் பறிக்க முயன்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அவர் தர மறுக்கவே மூதாட்டியை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது, தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிலம்பரசனை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்,.

தொடர்ந்து விசாரணை

தொடர்ந்து விசாரணை

மேலும் தமிழக பகுதியான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டியில் பிப்ரவரி மாதம் மூன்று மூதாட்டிகள், மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், இது தொடர்பான வழக்கில் சிலம்பரசனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள ஜெயங்கொண்டம் போலீசார் முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+