டெல்லி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, புதுச்சேரியில் எதிர்ப்பு.. மாணவர் கூட்டமைப்பு நூதன போராட்டம்
Recommended Video
புதுச்சேரி: டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கடந்து சில தினங்களுக்கு முன்பு கோபால் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இதேபோல் நேற்றைய தினம் ஜாமியா பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள ஷாஹின் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.



இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் போன்று இருவருக்கு வேடமிட்டு, அவர்களின் கைகளில் சங்கிலியை கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்து, முட்டிப்போட வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications