கைலியை வைத்து கையை கட்டி.. புதுச்சேரி சிறுமி கொலை.. போலீஸ் விசாரணையில்.. வெளியான ஷாக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இன்று சிறப்புக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Puducherry 9 years old girl death Police gives shocking informations about the incident

இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை வேகமாக நடந்து வருகிறது. புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மரணம் பின்னணி: புதுச்சேரி சிறுமி காணாமல் போன அன்றே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். வெறும் 2.30 மணி நேரத்தில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. 12.30 மணியளவில் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி கருணாஸ் அழைத்து சென்றுள்ளார்.

அங்கே இருந்த வைக்கோல் புதர் அருகே வைத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். அங்கே சிறுமி உடைகளை அகற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை விவேகானந்தன் பார்த்துள்ளார்

இதையடுத்து சிறுமியை சமாதானம் செய்வதாகக் கூறி விவேகானந்தன் சமாதானம் செய்துள்ளார். இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சிறுமியை அவரது கை, கால்களைக் கட்டி இரண்டு பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து பலாத்காரம் செய்யும் போது அந்த சிறுமி கத்தியுள்ளார். அதன்பின் அந்த சிறுமியின் வாயை பொத்தியதால் மூச்சுத்திணறி சிறுமி பலியாகி உள்ளார். 12.30 மணிக்கு காணாமல் போன சிறுமியை கொன்று 1.45 மணியளவில் கொலை செய்யப்பட்டு சிறுமியை 2.30 மணிக்கு சாக்கடையில் வீசி உள்ளனர்.

அதன்பின்தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்கால் உள்ளது. அதில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது.

வழக்கு: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுச்சேரி சம்பவம்: புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை மட்டுமின்றி மொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இன்று சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் மாயமாகும் முன்பு மகள் கடைசியாக தொட்டு விளையாடிய பொருட்கள் மற்றும் புத்தகத்தை கையில் எடுத்து தாய் கதறி அழுத சம்பவம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+