அரண்ட புதுச்சேரி.. பனியனுடன் ஆளுநரிடம் ஓடி, பசப்பு வார்த்தை பேசி.. திமுக மீது பாய்ந்தது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், உண்மை முகத்திரையை வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கிழித்தெறிவார் என்று புதுச்சேரி அதிமுக அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில், உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
வெறும் பொய்: "வெறும் பொய்யை மட்டும் மூலதனமாக கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சியில் உட்கார்ந்துள்ளார்.. முதல்வரான பிறகு முதலை எவ்வாறு தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாதோ, அதுபோலவே, முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்...

Puducherry AIADMK secretary Anbazagan criticized CM MK Stalin and DMK Government

கடந்த 1989ல், அதாவது, சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்திற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை, திமுகவின் அப்போதைய முதல்வரும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பெண் என்றும் பாராமல் அவரைத் தாக்கி அவமானப்படுத்தினார்கள். இந்நிலையில், அதுபோல இன்றைய தினம் சட்டமன்றத்தில் திமுக அறங்கேற்றிய பெண்கள் மீதான தாக்குதலை, பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் சுட்டிக்காட்டி பேசினார்..

நாடகம்: அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை, அப்போது ஜெயலலிதா நடத்திய நாடகம் என்றும் கூறியிருக்கிறார். அதெப்படி? நடந்த உண்மை சம்பவத்தை மறைத்து, வாய் கூசாமல் பொய் பேசுகிறார்?

வெறும் பனியன்: எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில், இல்லாத சட்டையை கிழித்துக்கொண்டு, பனியனுடன் ஆளுநரிடம் காலில் விழுந்து தன்னை தாக்கிவிட்டதாக பசப்பு வார்த்தை பேசியவர் தான் முதல்வர் ஸ்டாலின். ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என்று பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.

மதுரையில் வரும் 20-ம் தேதி அன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு பிறகு திமுகவை துரத்தியடிக்கும் சூழல் உருவாகும்.. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக இந்த மாநாடு அமையும்.. தன்னுடைய குடும்ப நன்மைக்காக ஆட்சி நடத்தும் திமுகவினர் அதிமுகவை பற்றியோ, மற்றவர்களை பற்றியோ பேச எந்த அறுகதையும் கிடையாது..

மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், உண்மை முகத்திரையை வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி யார் கிழித்தெறிவார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+