புதுச்சேரி: திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா- ஒரேநாளில் 2 பேர் பதவி விலகலால் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் காங். எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணை தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் இன்று பதவி விலகியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.

இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசனும் தமது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பலம் 12 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மொத்தம் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். தற்போதைய நிலையில் புதுச்சேரி சட்டசபையின் மொத்த பலம் 26. புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் நியமன உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் 3 நியமன எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் தரப்பு கணக்கில் எடுக்கக் கூடாது என வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
திமுகவில்தான் நீடிப்பேன்
இதனிடையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பேட்டியளித்த வெங்கடேசன், தொகுதி மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் செய்ய முடியவில்லை. அதனால்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறே.
அதேநேரத்தில் திமுகவில் தொடர்ந்து நீடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications