புதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சிவப்பு மண்டலமானது புதுச்சேரி
புதுச்சேரி: சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதால், புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியது.
Recommended Video

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் மொத்தம் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் இருந்து வந்த ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஏற்கனவே குணமந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மாஹே பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது 21 பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மேலும் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்ததால் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து இருக்க வேண்டும் என்றார். மேலும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications