புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?
புதுச்சேரி: தமிழக அரசியலில் இப்போதைக்கு ஹாட் டாபிக் விஜய்தான்.. அதிலும், வேட்பாளர் தேர்வு, பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு போன்ற பரபரப்புகளையும் தாண்டி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட முடிவெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம்?
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் மூலமாக முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் இடையே பல வருடங்களாகவே ஒருவித நட்பு நீடித்து வருகிறது... ரங்கசாமியை பொறுத்தவரை மூத்த அரசியல் தலைவர் என்பதையும்தாண்டி அவர் ஒரு தீவிர ஆன்மீகவாதி..

புதுச்சேரி ரங்கசாமி
தவெக-வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, ரங்கசாமி தனது வீட்டுக்கு பக்கத்திலுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வைத்து எலுமிச்சை பழம் கொடுத்து புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய்க்கு ஆசி வழங்கினாராம். அதேபேல 2வது மாநாட்டிற்கான தேதி மற்றும் நேரத்தை கூட விஜய்யின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் ரங்கசாமிதான் குறித்து தந்ததாக தகவல்கள் அப்போதே கசிந்தன
விஜய் இப்போது 2 தொகுதிகளில் போட்டியிடுவதைத் தீர்மானித்திருப்பது ரங்கசாமியின் அரசியல் வரலாற்றை அப்படியே பிரதிபலிப்பது போல் உள்ளதாக தெரிகிறது..
காரணம், ரங்கசாமி தனது அரசியல் பயணத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட போதெல்லாம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருக்கிறார். 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் தொடங்கியபோது கதிர்காமம், இந்திரா நகர் என இரண்டு தொகுதிகளில் வென்று முதல்வர் ஆனார். ஆனால், 2016-ல் தட்டாஞ்சாவடியில் மட்டும் போட்டியிட்டபோது அவரால் எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே வர முடிந்தது.
விஜய்க்கு தந்த எலுமிச்சம் பழம்
இந்தத் தோல்விக்கு பிறகு, ஒரு தொகுதியில் நிற்பது பின்னடைவை தரும் என்று நினைத்து, 2021-ல் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 இடங்களில் களம் கண்டார். ஏனாமில் தோற்றாலும் தட்டாஞ்சாவடி வெற்றி அவரை மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்த்தியது. இப்படி 2 தொகுதி சென்டிமென்ட் தான், இப்போது விஜய்யின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தேர்வுக்கும் அடித்தளமாக அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
இதெல்லாம் அவரவர் ஆழ்மனதின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.. அதற்குள் நாம் போக தேவையில்லை.. ஆனால் அதேசமயம், அரசியல் என்பது வெறும் வாக்கு வங்கி கணக்கு மட்டுமே கிடையாது.. அது சில நேரங்களில் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நகர்த்தப்படுகிறது.
தவெக விஜய் சென்ட்டிமென்ட்
அந்தவகையில், ரங்கசாமி மற்றும் விஜய் இடையேயான இந்த ஒற்றுமை ஆச்சரியமானதுதான்.. ரங்கசாமியைப் போலவே விஜய்யும் விமர்சனங்களுக்கு உடனடியாகப் பதில் தராமல் மௌனமாக இருந்துவிட்டு, சரியான நேரத்தில் அதிரடி காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தமிழக வரலாற்றிலும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி கண்ட முன்னுதாரணங்கள் உண்டு. விஜய்யின் இந்த முடிவு வெறும் பாதுகாப்பு கருதியது மட்டுமல்லாமல், ரங்கசாமி போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் ஆலோசனையையும், வெற்றியைக் கொடுக்கும் என்ற சென்ட்டிமெண்ட்டையும் அடிப்படையாகக் கொண்டதாகவே தெரிகிறது..
கூட்டணியில் பிளவு அல்லது நெருக்கடிகள் வரும்போது தனித்து நின்று சாதிக்கும் ரங்கசாமியின் பாணி, விஜய்க்கு ஒரு முன்னோடியாக நிச்சயம் அமையக்கூடும்... இந்த புதுச்சேரியின் சென்டிமென்ட் தமிழகத்தின் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications