புதுவை ஒப்பந்ததாரர் கொலை வழக்கு! ஹோட்டலில் நடந்தது என்ன? தமிழக போக்குவரத்து ஊழியர் வாக்குமூலம்
புதுவை: புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் கொலையில் தமிழக போக்குவரத்து ஊழியர், மனைவி, உறவினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் கொன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுவை முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் புதுவை பொதுப் பணித் துறையில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று சொந்தமாக கழிவுநீர் அகற்றும் வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கழிவுநீர் அகற்று வாகனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக நேற்று அவரது பெண் உதவியாளருடன் சென்னை வந்துள்ளார்.
மதியம் 3 மணியளவில் அசோக் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு காரில் இருக்கும் போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தான் தயாராக கொண்டு வந்த கத்தியால் பிரகாஷை குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக அசோகர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தனஞ்செழியன் (42), பிரகாஷுடன் காரில் வந்த தனஞ்செழியனின் மனைவி சுகன்யா (37), இவரது உறவினர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குணசுந்தரி (27) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் புதுவை ஒப்பந்ததாரரை கொலை செய்தது ஏன் என கைது செய்யப்பட்ட தனஞ்செழியன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் கிளார்க்காக பணி செய்து வருகிறேன். எனக்கும் புதுவை நெட்டப்பாக்கத்தை சேர்ந்த உறவினரின் மகள் சுகன்யாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது மனைவி சுகன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு புதுவையில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
நான் எனது மாமியார் வீட்டுக்கு சென்று அவரை அழைத்த போது அவர் என்னுடன் வரவே இல்லை. இந்த நிலையில்தான் என் மனைவிக்கும் அவரது பள்ளி பருவ நண்பர் பிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டதை அறிந்தேன். இருவரும் கள்ளக்காதலில் இருந்துள்ளனர்.
என் மனைவியை பிரகாஷ் அவரது நிரந்தர உதவியாளராக வைத்துக் கொண்டார். இதனால் எனது மனைவி என்னை மறந்துவிட்டார். இது எனக்கு ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு முறை பிரகாஷிடம் சென்றும் நான் சண்டையிட்டேன். ஆனால் அவர் என்னை உதாசீனம் செய்தார்.
என் மனைவியுடன் பிரகாஷுடன் கள்ள உறவில் இருப்பதால் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ், எனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.
அப்போது எனது மனைவியின் உறவினரான ஐடி ஊழியர் குணசுந்தரியை போனில் தொடர்பு கொண்டு "சென்னை அசோக் நகர் வந்துள்ளேன், இந்த ஹோட்டலுக்கு வா" என என் மனைவி அவரை அழைத்துள்ளார். அதன்பேரில் அவர்கள் 3பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர். அப்போது நான் யதார்த்தமாக குணசுந்தரிக்கு போன் செய்தேன்.
அப்போது அவர்தான் பிரகாஷும் என் மனைவியும் சென்னை வந்த விஷயத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த ஓட்டலுக்கு சென்றேன்.
அங்கு பிரகாஷ் காரில் உட்கார்ந்திருந்ததை பார்த்து அவரது விலா எலும்பு பகுதியில் இரு முறை ஓங்கி குத்தினேன். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் எனது மனைவியை மிரட்டி என்னுடன் அழைத்துச் சென்றேன் என தனஞ்செழியன் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications