இ.பி ஆபீஸில் கோவணத்துடன் நுழைந்து.. கரண்ட் பில் கட்ட லைனில் நின்று.. யார் பாருங்க? மலைத்த புதுச்சேரி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி இபி ஆபீசில் இன்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.. அப்படி என்ன நடந்தது?
தமிழகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு, சுமார் ரூ.31,500 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தன. ஆகையால், கரண்ட் பில் விரைவில் குறைக்கப்பட்டு விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திடீரென மின் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது..

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.. "மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகளை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப்பயனும்இல்லை, இதனால் மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்..

Puducherry EB Office electricity bill

ஏழை மக்கள்: ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொழில் நிறுவனங்களும் கடுமையான இழப்பை சந்தித்து வரும்போது, புதிய கட்டண உயர்வு மேலும் அவர்களை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன... மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி தந்திருந்தது. ஆனால், அதனை நிறைவேற்றாமல், சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் திமுக அரசு செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன..

இந்த கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் அறிவித்து முன்னெடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், புதுச்சேரியில் சமூக ஆர்வலர் ஒருவர் கோவணம் கட்டிக்கொண்டு மின்அலுவலகம் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

மின் அலுவலகம்: புதுச்சேரி உப்பளத்தில் செயல்பட்டு வருகிறது மின்துறை அலுவலகம்.. இன்று காலை, சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர் ராஜன் என்பவர், திடீரென இந்த அலுவலகத்துக்குள் நுழைந்தார்.. அப்போது அவர் கோவணம் கட்டியிருந்தார்.. நாமம் போட்டிருந்தார்.. இந்த கோலத்திலேயே வந்து கரண்ட் பில் கட்டினார்.. இத்தனைக்கும் அலுவலகத்தில் நிறைய பேர், கரண்ட் பில் கட்ட வந்திருந்தார்கள்.. அவர்கள் அனைவரும் வரிசையில் நின்றிருந்தனர்..

சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர் ராஜனும், அவர்களுடன் வரிசையில் நின்று, மின்கட்டணம் செலுத்தினார்.. வரிசையில் கோவணத்தில் நிற்கும் சமூக ஆர்வலரை பார்த்ததுமே செய்தியாளர்கள் அவரிடம் சென்றார்கள்.,

கரண்ட் பில்: அப்போது சமூக ஆர்வலர், "மின்துறையை தனியார் மயமாக்கவில்லை என்று சொல்கிறார்கள்.. ஆனால், கரண்ட் பில் மட்டும் ஜாஸ்தியா வருது.. கரண்ட் பில்லில் மறைமுகமாக பல கட்டணங்களை வசூலிக்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருப்பவர்களும், ரூ.3 ஆயிரம் கரண்ட் பில் கட்டும் நிலைமை இருக்கிறது.
குஜராத், டெல்லி, பஞ்சாப் என நிறைய மாநிலங்களில் மின்கட்டணத்தில் சலுகைகள் இருக்கும்போது, புதுச்சேரியில் மட்டும் ஏன் இவ்வளவு வரி போடுகிறார்கள்? கரண்ட் கனெக்‌ஷன் எடுப்பதற்கு டெபாசிட் பணம் கட்டியிருக்கிறோமே? அதிலிருந்து கிடைக்கும் வட்டியே மின்துறைக்கு போதுமே.. அப்பறம் எப்படி மின்துறை நஷ்டமாகும்? இதுக்கு மேலயும் மின்கட்டணம் உயரப்போவதாக சொல்கிறார்கள். இப்படி சொல்லி சொல்லியே மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

கோவணம்: இப்படியே போனால், இன்னும் கொஞ்சம் நாளில், கரண்ட் பில் மூலம் பொதுமக்களின் கோவணத்தை கூட உருவிடுவாங்க.. இதை மக்களுக்கு உணர்த்தவே, கோவணத்துடன் மின் கட்டணம் செலுத்த வந்தேன்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் சுந்தர் ராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+