Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுங்கியால் சிறுமியை கட்டி.. கொதித்த புதுச்சேரி.. இன்று பந்த் - கடைகள் அடைப்பு - பஸ், ஆட்டோ ஓடவில்லை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: போதை பொருள் அடிப்படையில் சிறுமி கொலை நடந்துள்ளதால் அரசு, காவல் துறையை கண்டித்து இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் இன்று புதுச்சேரியில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக சார்பில் பந்த் இன்று காலை 6 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.

புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.

Puducherry Girl Death case and AIADMK India Alliance announces bandh today in puducherry shops will be closed

கொடூரம்: ஒட்டுமொத்த புதுச்சேரியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.. 9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்துள்ளனர் மகாபாவிகள்..

இதனால், சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை துவங்கிவிட்டனர்.. சிறுமியை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள்.. சிறுமியின் கொலைக்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணம், போதையை ஒழியுங்கள் என்று கூறி, கடலில் இறங்கி போராட்டமும் செய்துவருகிறார்கள்.

ஆவேசம்: கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என மொத்த பேரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், கடந்த 2 நாட்களாகவே, புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து இன்று பந்த் போராட்டம் ஆரம்பமாகி உள்ளன. இந்த முழுஅடைப்பில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள்: புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.

முன்னதாக, சிறுமியின் படுகொலைக்கு கடும் கண்டனத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டத்தை தற்போது அதிமுக துவங்கி உள்ளது.. புதுச்சேரி மாநில அதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

தலைக்குனிவு: அன்பழகன் இதுகுறித்து கூறும்போது, இது புதுச்சேரிக்ககே தலைகுனிவு.. போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக என இரு தரப்பிலுமே பந்த் போராட்டம் துவங்கப்பட்டுள்ளதால், இன்று புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது... புதுச்சேரியில் பெரும்பாலும் தனியார் பஸ்களே அதிகம் என்றாலும், பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்.. அத்துடன், டெம்போ, ஆட்டோக்களும் ஓட வாய்ப்பில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

முழு ஆதரவு: காரணம், சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோடெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவையும் தெரிவித்து, தற்போது போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.. இதனால், இன்றைய தினம் புதுச்சேரியில் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+