பாப்பா எங்க இருக்க? புதுவை சிறுமியை தேடும் வளர்ப்பு நாய்.. மார்ச் 2 முதல் உணவு உண்ணாமல் அழுகை

Subscribe to Oneindia Tamil

புதுவை: மார்ச் 2 ஆம் தேதி புதுவையை உலுக்கிய பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் ஆசையாக வளர்த்த சிப்பிப்பாறை நாய் அவரை தேடி தினமும் வீட்டை சுற்றி வரும் சோக சம்பவம் நடந்து வருகிறது.

மேலும் அந்த சிப்பிப்பாறை நாய் சிறுமி மாயமான நாள் முதலே கிட்டதட்ட 10 நாட்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பதாக சிறுமியின் தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.

Puducherry Girl death case Girl s pet dog not eating anything as girl is no more

புதுவையில் மார்ச் 2 ஆம் தேதி ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அந்த சிறுமி ஏழ்மையில் இருந்தாலும் அவர் படிப்பிலும் , விளையாட்டிலும் பேசுவதிலும் மிகவும் சுட்டி. முத்தியால்பேட்டை சோலை நகரில் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்துள்ளார். பல பெற்றோர் அந்த சிறுமியை உதாரணம் காட்டி தங்கள் குழந்தைகளை கடிந்து கொள்வதாகவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுமியின் தந்தை ஓட்டுநராக இருந்தாலும் அவர் எந்த பொருள் கேட்டாலும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து வருவாராம். அந்த வகையில் அந்த சிறுமி தனக்கு ஒரு சிப்பிப்பாறை நாய் வேண்டும் என கேட்டாராம். அவர் ஆசைப்படியே அந்த ரக நாயை வாங்கிக் கொடுத்திருந்தார்.

அந்த நாயுடன் பாசமாக விளையாடும் அந்த குழந்தை, அதற்கு ரோசி என பெயரிட்டுள்ளார். தினமும் நாய்க்கு உணவு வைத்துவிட்டுதான் அவர் சாப்பிடுவாராம். வாயில்லா ஜீவன் மீது எத்தனை அக்கறை பாருங்கள். சில பெரியவர்கள் கூட தாங்கள் சாப்பிட்டுவிட்டுதான் நாய்க்கு உணவளிப்பார்கள். ஆனால் இந்த சின்ன வயதில் எத்தனை பக்குவம். வாயில்லா ஜீவனுக்கும் பசிக்குமே, அது வாயை திறந்து கேட்காதே என கருதி முதலில் அதற்கு சாப்பாடு போடுவாராம் (இந்த பிஞ்சை நாசப்படுத்த எப்படிதான் அந்த காமூகர்களுக்கு மனம் வந்ததோ).

எல்லா குழந்தைகளை போல் அந்த சிறுமிக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் தனக்கு தோழனாகவும் உடன் பிறந்ததாகவும் உள்ள அந்த ரோசிக்கும், நூடுல்ஸை கொடுப்பாராம். அதுவும் விரும்பி சாப்பிடுமாம். இந்த சூழலில் கடந்த 2ஆம் தேதி சிறுமி மாயமான நாள் முதல் இன்று வரை சிறுமியின் பெற்றோர் கொடுக்கும் உணவை சாப்பிட மறுக்கிறதாம்.

அதற்கு பிரியமான நூடுல்ஸ், பிஸ்கெட்டை கொடுத்தும் சாப்பிட மறுக்கிறதாம். சிறுமியை தேடி வீடு முழுவதும் சுற்றி சுற்றி வருகிறதாம். 10 நாட்களுக்கு மேலாக சாப்பிடாமல் உள்ளதால் நாய் மெலிந்து நிற்க கூட முடியாமல் உள்ளது. இதனால் அங்கு அங்கு சுற்றி நாய் சோர்வடையாமல் இருக்க அதை கட்டி போட்டுள்ளனராம்.

மேலும் இரவு நேரம் வந்தால் போதும் சிறுமியை நினைத்து நாய் அழுகிறதாம். சிறுமியை நினைத்து சாப்பிடாமல் தினமும் தண்ணீரை மட்டும் குடிக்கும் ரோசி நாளுக்கு நாள் உடல் மெலிந்து காணப்படுகிறது.

பின்னணி என்ன: புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த ஓட்டுநரின் 9 வயது மகள். இவர் அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் காணாமல் போன அந்த சிறுமியை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், முத்தியால்பேட்டை போலீஸில் புகார் அளித்தனர்.

சிறுமிக்கு என்ன ஆனது என்பது குறித்து துப்பு தெரியாமல் தவித்து வந்த நிலையில், அந்த பகுதியில், சிறுமியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கால்வாயில் மூட்டை மிதப்பதாக கடந்த 6 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு மூட்டையை சோதனை செய்த போது சிறுமியின் உடல் இருந்தது. அது தங்கள் மகள்தான் என பெற்றோர் அடையாளம் கண்டனர்.

அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை மூட்டை கட்டி கால்வாயில் தூக்கி வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் காலாப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளி விவேகானந்தன் கடந்த 11 ஆம் தேதி தான் அணிந்திருந்த சட்டையால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது உடனிருந்த மற்றொரு குற்றவாளி கருணாஸ் கூச்சல் போட்டதால் வார்டன் வந்து விவேகானந்தனை காப்பாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+